கற்பூரவல்லித் தொக்கு
தேவையானவை:
கற்பூரவல்லி இலை - 20 (மிக்ஸியில் விழுதாக அரைக்கவும்)
புளிக்கரைசல் - கால் கிண்ணம்
Advertisement
Advertisement
மிளகுத்தூள், சீரகத்தூள், ஓமப்பொடி - தலா ஒரு தேக்கரண்டி
சீரகம் - கால் தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
நல்லெண்ணெய் - 2 தேக்கரண்டி
செய்முறை:
வாணலியில் நல்லெண்ணெய் சேர்த்து சீரகம் தாளித்து, அரைத்த கற்பூரவல்லி சேர்த்து வதக்கி, புளிக்கரைசல், மிளகுத்தூள், சீரகத்தூள், ஓமப்பொடி மற்றும் உப்பு சேர்த்து நன்றாகக் கொதிக்கவிடவும்.
வற்றியதும் இறக்கி வைக்கவும். இதை பிரெட், சப்பாத்தி, தோசையில் தடவி ரோல் செய்து கொடுக்க, பிள்ளைகள் விரும்பிச் சாப்பிடுவார்கள். சூடான சாதத்தில் நெய் சேர்த்துப் பிசைந்து சாப்பிடலாம். அடிக்கடி சளி, தலைபாரம், சைனஸ் தொந்தரவால் பாதிக்கப்படுபவர்கள், வாரம் இருமுறை இதைச் சாப்பிட்டு வர, நல்ல தீர்வு கிடைக்கும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.