கூகுளின் ஆஸ்க் மேப்ஸில் ஹிந்தி
கூகுள் தனது மேப்ஸில் உள்ள ஜெமினி ஏ.ஐ. மூலம் ஹிந்தி மொழியில் தகவல்களைப் பெறும் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.
கூகுள் தனது மேப்ஸில் உள்ள ஜெமினி ஏ.ஐ. மூலம் ஹிந்தி மொழியில் தகவல்களைப் பெறும் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.
கூகுள் மேப்ஸில் உள்ள ஆஸ்க் மேப்ஸ் சேவை, மக்களுக்கு வழிகாட்டுதல் மட்டுமின்றி நமது பயணங்களைத் திட்டமிடவும், செல்லும் வழியில் தேவைக்கு ஏற்ற சேவைகளை கேட்டுப் பெறவும் உதவுகிறது.
இந்தச் சேவை ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, இந்தோனேசியா, ஜப்பான், மெக்சிகோ உள்பட 150 நாடுகளுக்கும் அதிகமான இடங்களில் கிடைக்கிறது.
Advertisement
Advertisement
ஒருவர் விமானத்துக்காகக் காத்திருந்து, தங்கும் விடுதியிலும் முன்பதிவு செய்திருந்தால், அங்கு இருக்கும் சில மணிநேர ஓய்வில் அப்பகுதியில் என்ன செய்வது என்று கேட்கலாம். கூகுள் மேப்ஸ், அவர்கள் தங்கியிருக்கும் இடத்துக்கு அருகிலுள்ள இடங்களைப் பரிந்துரைப்பதுடன், விமான நிலையத்துக்கு எப்போது புறப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தும்.
பொதுப் போக்குவரத்து தரவுகளான பேருந்துகள், ரயில்கள், மெட்ரோ அல்லது படகுகள் பயனர், ஏதேனும் தாமதங்கள் குறித்த தகவல்கள் உட்பட, ஒரு மெய்நிகர் புறப்பாடு பட்டியலை உரையாடலிலேயே நேரடியாகப் பெறலாம்.
இந்தச் சேவையை ஹிந்தி மொழியில் கேட்டுப் பெறவும், பதிவிட்டுப் பெறவும் செய்யலாம். இந்தப் புதிய சேவையை கூகுள் அறிமுகம் செய்துள்ளது.
எந்த இடத்துக்குச் சென்றாலும், அங்குள்ள போக்குவரத்து, விடுதி என அனைத்து விவரங்களையும் ஹிந்தியில் கேட்டுப் பெறலாம்.
நமது இ-மெயிலை கூகுள் மேப்புடன் இணைத்துவிட்டால், நாம் செல்ல வேண்டிய இடங்களை முன்கூட்டியே திட்டமிட்டு அறிவுறுத்தல்களை வழங்கும்.
கூகுளின் இந்தப் புதிய சேவை இந்தியாவில் அதன் பயனாளர்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கக்கூடும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.