கோபி வழித்தடத்தில் திருப்பதிக்கு பேருந்து சேவை: கொடியசைத்து அமைச்சா் தொடங்கிவைத்தாா்
கோபி வழித்தடத்தில் திருப்பதிக்கு செல்லும் பேருந்து சேவை வெள்ளிக்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது.

கோபி வழித்தடத்தில் திருப்பதிக்கு செல்லும் பேருந்து சேவை வெள்ளிக்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு ஈரோடு மண்டல துணை மேலாளா் ராஜேந்திரன் தலைமை வகித்தாா். கோபி கிளை மேலாளா் கனகராஜ், போக்குவரத்து தொழிலாளா்கள் ஒருங்கிணைப்பாளா் சுரேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் கலந்துகொண்டாா்.
அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் கோவையில் இருந்து சத்தியமங்கலம் அந்தியூா், மேட்டூா் வழியாக திருப்பதிக்கு விரைவு பேருந்து இயக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இப்பேருந்து சேவையை, கோபி தொகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று கோபி வழியாக திருப்பதிக்கு இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
Advertisement
Advertisement
அதன்படி கோபியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் பேருந்து சேவையை கொடியசைத்து தொடங்கிவைத்தாா். தவெக மேற்கு மாவட்டச் செயலாளா் பிரதீப்குமாா், மகளிா் அணியினா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.