முகப்பு
தினமணி கதிர்

உறைந்த ஆறுகளில் நடக்கலாம்...

உறைந்த ஆறுகளில் மனிதர்கள் நடப்பது ஐரோப்பா, அமெரிக்கா போன்ற நாடுகளில் சகஜம். இந்தியாவிலும் 'சன்ஸ்கர்' எனும் நதி ஐந்து மாதங்கள் உறைந்திருக்கும்.

Updated On : 15 பிப்ரவரி 2026, 4:15 am IST
பகிர்:

உறைந்த ஆறுகளில் மனிதர்கள் நடப்பது ஐரோப்பா, அமெரிக்கா போன்ற நாடுகளில் சகஜம். இந்தியாவிலும் 'சன்ஸ்கர்' எனும் நதி ஐந்து மாதங்கள் உறைந்திருக்கும். அதன் மீது நடந்தே தங்கள் பகுதிகளுக்கே செல்ல வேண்டியிருக்கும். வழக்கமான வழிகள் பனிப்பொழிவால் பயணிக்க இயலாத சூழலில் இருக்கும்.

பெரிய இமயமலைத் தொடரின் வட கிழக்கில் உருவாகி இமயமலை, சன்ஸ்கர் மலைத் தொடர் வழியாக கிழக்கில் பாய்ந்து லடாக் முழுவதும் ஓடி நிமோ என்ற இடத்தில் சிந்து நதியுடன் இணைகிறது.

உலகில் உறைந்து விடும் பிரபல நதிகள் சில:

Advertisement

Advertisement

லீனா நதி (ரஷியா)

ரஷியாவின் கிழக்கில் உள்ள இந்த நதியானது 4,294 கி.மீ. நீளம் கொண்டது. ரஷியாவுக்குள் முழுமையாக ஓடும் நதி. சைபீரியாவில் உள்ள மூன்று பெரிய நதிகளில் ஒன்று.

இதன் அனைத்து நீர்ப்பிடிப்புப் பகுதியிலும் அடியில் உறைபனி உள்ளது. படுகையின் 75 சதவீதம் தொடர்ச்சியாக உள்ளது.

வெப்பம் 60 முதல் 70 டிகிரி செல்சியஸ். பனிக்கட்டியாகி, 'ஐஸ் ஹைவே'யாகப் பயன்

படும். பாதுகாப்பாக தனிப் பாதை உருவாக்கப்பட்டு, அதில் வாகனங்கள் சாதாரணமாய் ஏழு மாதங்கள் செல்லும். குளிர் காலம் முழுமையடைந்தவுடன் பனிக்கட்டிகள் உடைந்துவிடும்.

மஞ்சள் நதி (சீனா)

சீனாவின் இரண்டாவது மிக நீளமான நதியான இதன் இயற்பெயர் ஹூவாங்கே. 5,464 கி.மீ. நீளம் கொண்டது. லோஸ்பீட பூமியில் பயணிக்கும்போது, அதன் வண்டலால் மஞ்சள் வண்ணம் பெறுகிறது. வடக்கு சீனாவின் பெரும் பகுதியை உள்ளடக்கியது. இது முழுவதும் உறைவதில்லை. ஆனால், பகுதிகளில் உறைந்து பனிக்கட்டிகள் மிதக்கின்றன. பல இடங்களில் பனி கம்பளம் விரித்தது போல் படர்ந்திருக்கும்.

ஹடகோயூ நீர்வீழ்ச்சி உறைந்து பல பனிப் பாறைகளை உருவாக்கி விடுகிறது. இதனை இயற்கையின் அற்புதத்தைப் பிரதிபலிக்கும் ஓவியம் எனப் புகழ்கின்றனர். நூதன பனிப் படிவங்கள் பல உருவாகி, பார்வையாளர்களை அசத்துகிறது.

அங்காரா நதி, (ரஷியா)

சைபிரியா பகுதியில் பாயும் முக்கிய நதி. பைக்கால் ஏரியில் உற்பத்தியாகி யெனிசி நதிரில் இணைகிறது. 1,779 கி.மீ. பயணிக்கும் இது 'பைக்கால் ஏரி' அருகில் இருப்பதால் உருகுவதில்லை. ஆனால், வழிநெடுக நீராவி மேகங்களை உருவாக்குகிறது. அடர்ந்த உறைபனி, மூடுபனியையும் உருவாக்குகிறது. ரஷியாவின் மிகப் பெரிய மின் உற்பத்தி இந்த நதியில்தான் நடக்கிறது.

யூகோன் நதி (அமெரிக்கா)

வடமேற்கு, வட அமெரிக்காவின் ஒரு முக்கிய நீர்வழி. பிரிட்டிஷ் கொலம்பியாவிலிருந்து கனடாவின் யூகோன் பிரதேசத்தின் வழியாகப் பயணிப்பதால் இந்தப் பெயர். 3,190 கி.மீ. பயணித்து, அலாஸ்கா வழியாகப் பயணித்து பெர்ரிங் கடலில் கலக்கிறது. கனடாவில் அதிகம் பாயும் நதி. அக்டோபர் இறுதி முதல் மே மாதத்தில் இரு வாரங்கள் வரை பனிக்கட்டியாகிவிடும்.

பின்னர், அதில் வாகனப் பயணங்கள், நாய் வண்டி பயணங்கள் உள்ளிட்ட வீர, தீர விளையாட்டுகள் நடைபெறும். வெப்பம் 40--50 டிகிரி செல்சியஸ் வரை இறங்கும். இதில் பயணித்து அழகான காட்சிகளை அக்டோபர் முதல் ஏப்ரல் மாதம் வரை காணலாம். ஆனால், உடைய ஆரம்பிக்கும் சமயத்தில் அருகில் சென்றால் வெடிபோல் வெடித்து படுகாயங்களை ஏற்படுத்தும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments