FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தினமணி கதிர்

மாசற்ற காற்றைச் சுவாசிக்க...

'ஒவ்வொருவரும் தங்களது வாழ்நாளில் ஒரு மரக்கன்றையாவது நடவேண்டும்.

Updated On : 12 ஜூலை 2026, 4:08 am IST
பகிர்:

'ஒவ்வொருவரும் தங்களது வாழ்நாளில் ஒரு மரக்கன்றையாவது நடவேண்டும். 'வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம். மாசற்ற காற்றைச் சுவாசிப்போம்' என்ற கொள்கையுடன் கோவை ராமகிருஷ்ணா மிஷன் அனைத்து வித்யாலயா முன்னாள் மாணவர்கள் சங்கத்தினர் தொடர்ந்து மரக்கன்றுகளை நடுவதை இயக்கமாகக் கொண்டு செயல்படுகிறார்கள்' என்கிறார் அந்த அமைப்பின் செயலாளரும், சேலம், நாமக்கல் மாவட்டங்களின் முன்னாள் கல்வி அலுவலருமான மு.ஆ.உதயகுமார்.

அவரிடம் பேசியபோது:

'மரங்களைப் பாதுகாக்க வேண்டும். அவற்றை அழித்துவிடக்கூடாது. 'ஆல் போல் தழைத்து, அருகுபோல் வேரூன்றி...' என்று சான்றோர் வாழ்த்துவது உண்டு. 'ஓரறிவுடைய மரமானது ஆறறிவு மனிதருக்கு அனைத்து வகையிலும் பலன் தருபவையாக உள்ளன. மரங்கள் வளர்ந்தால், மழை வளரும். இயற்கை வளங்களைப் பெறுவோம்.

Advertisement

Advertisement

சேலம், நாமக்கல் மாவட்டங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் ஒருங்கிணைந்து, மரக்கன்று வளர்ப்புப் பணிகளை முன்னெடுத்து மேற்கொண்டு வருகிறோம்.

2014-ஆம் ஆண்டு எங்களது கோவை ராமகிருஷ்ணா மிஷன் முன்னாள் மாணவர்கள் சங்கம் மூலமாக மரக்கன்றுகள் நடுதல், கோயில் உழவாரப் பணி ஆகிய திட்டங்களைத் தொடங்கினோம். இதற்கு அந்தந்தக் கிராம மக்களும் ஆதரவை நல்கினர்.

நாமக்கல் சித்தர்மலையில்தான் எங்களுடைய முதல் தெய்வீக மரக்கன்றுகள் நடும் விழா நடத்தப்பட்டது. அதன்பிறகு ஒவ்வோர் ஆண்டும் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறோம். 12 ஆண்டுகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டுள்ளோம். தற்போது அவை வளர்ந்து மக்கள் நலனுக்கானதாக உள்ளது.

நாமக்கல் பெரியபட்டி ஸ்ரீ பிரசன்ன கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோயில் வளாகத்தில் தெய்வீக மரக்கன்றுகளை நட்டுள்ளோம். இதேபோல் கோயில்கள், பொது இடங்களிலும் மரக்கன்றுகள் நடும் சேவை தொடருகிறது.

நாமக்கல் மாநகராட்சியை ஒட்டிய பெரியபட்டி பகுதி குப்பை மேடாகக் காட்சியளித்தது. அதனை சுத்தம் செய்து மரக்கன்றுகளை நடுவதற்கு மாநகராட்சி ஆணையர் எஸ்.செல்வபாலாஜியிடம் அனுமதி கோரினோம். அதன்பின்னர், அவர் தானே முன்வந்து 27 நட்சத்திரங்களுக்கு உரிய மரக்கன்றுகள் நடும்பணியைத் தொடங்கி வைத்தார்.

நாமக்கல் மாநகராட்சியுடன் மனவளக்கலை மன்றம், அப்பர் உழவாரப் பணி அறக்கட்டளை, பசுமை நாமக்கல் உள்ளிட்ட அமைப்புகள் இணைந்து இந்தப்பணியை மேற்கொண்டு வருகின்றன.

முன்னாள் மாணவர் சங்கத்தின் நிர்வாகிகள் மாணிக்கம், தில்லை சிவக்குமார், அருணாசலம், குருவாயூரப்பன் உள்ளிட்டோர் சேவைப் பணிகளுக்கு உதவிவருகின்றனர்' என்கிறார் மு.ஆ.உதயகுமார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments