சிரி... சிரி... | 08-11-2026
எவ்வளவு பெரிய மேட்டரா இருந்தாலும் தலைவர் அதை ரொம்ப லைட்டா எடுத்துக்குவார்!
'எவ்வளவு பெரிய மேட்டரா இருந்தாலும் தலைவர் அதை ரொம்ப லைட்டா எடுத்துக்குவார்!'
'எப்படிச் சொல்றே?'
'குற்றப் பத்திரிகையை வாங்கி வச்சிக்கிட்டு, 'சி.பி.ஐ.காரங்க, பத்திரிகை வச்சிட்டுப் போறாங்க'ன்னு சிரித்தபடி சொன்னாரே!'
Advertisement
Advertisement
-வி.ரேவதி, தஞ்சை.
'ஏன்யா வீட்டுக்குள்ளே ஆட்டம் பாமை வெடிச்ச?'
'நீங்கதானே வீடு மொத்தமா விழுந்த அப்புறம் புதுசா கட்டித் தர்றேன்னு சொன்னீங்க!'
-தீபிகா சாரதி, சென்னை.
'நாய் வளர்க்காமலேயே 'நாய் ஜாக்கிரதை' போர்டு மாட்டி இருக்கீங்களே?'
'நான் நாய் வளர்க்கலைன்னு உங்களுக்குத் தெரியும்... திருடனுக்குத் தெரியாதே!'
-பர்வீன் யூனுஸ், சென்னை.
'உன்னைக் காதலிக்கிறதா சொல்லி ஒருத்தன் ஒத்தக் காலில் நின்னானே, அவன் என்ன ஆனான்?'
'சொந்தமா யோகா கிளாஸ் ஆரம்பிச்சிட்டான்!'
-எம்.பி.தினேஷ், இடையர்பாளையம்.
'எங்க பெண்ணை நாங்க தங்கத் தட்டில் வச்சு தாங்கறோம்...'
'சீர்ல அந்தத் தட்டைக் கொடுங்க... நாங்களும் தாங்கறோம்!'
- பர்வதவர்த்தினி, பம்மல்.