FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

சின்னத்திரை மின்னல்கள்!

சன் டிவி தொகுப்பாளினி, சீரியல், குறும்படங்கள் என பிஸியாக இருப்பவர் நட்சத்திரா.  இந்த ஊரடங்கு நாள்கள் குறித்து கூறுகையில், "" சின்ன வயதில் இருந்தே நான் வீட்டில் அதிகம் இருந்ததில்லை.

27 ஜனவரி 2024, 10:00 pm IST
பகிர்:


பொழுதை வீணடிக்காதீர்கள்!

சன் டிவி தொகுப்பாளினி, சீரியல், குறும்படங்கள் என பிஸியாக இருப்பவர் நட்சத்திரா.  இந்த ஊரடங்கு நாள்கள் குறித்து கூறுகையில், "" சின்ன வயதில் இருந்தே நான் வீட்டில் அதிகம் இருந்ததில்லை. அதுபோன்று ஒவ்வொரு சம்மர் வெக்ஷேனுக்கும்  எங்கேயாவது டூர் பிளான் செய்துவிடுவேன்.  அப்படி இருந்த என்னை இப்போது கரோனா வீட்டுக்குள்ளேயே முடக்கிவிட்டது.  ஆனா இதுலயும்  ஒரு நல்ல விஷயம், அம்மா, அப்பாவோட  அதிகம் நேரம்  இருக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. மேலும், நீண்ட  நாளாக செய்ய வேண்டும் என்று நினைத்திருந்த வேலைகள்,  கற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைத்த விஷயங்கள், பார்க்காமல் விட்ட படங்கள் என இப்போ பொழுதை கழிச்சுக்கிட்டிருக்கேன். இந்த நேரத்தை  வீணடிக்காமல், சமையல் கத்துக்கறது, புத்தகங்கள் படிக்கறது, ஆன்லைன் கோர்ஸ் என திறமையை வளர்த்துக்கறதுக்கான நேரமாக மாற்றிக்கொள்ளலாம்.  அந்த வகையில் நான் இப்போ துணி துவைக்க கற்றுக்கொண்டேன். இப்போ வீட்டுக்குள்ளேயே அடைந்திருக்கும் இந்த அனுபவம் இன்னும்  ஒரு ஐந்து வருடம்  கழித்துப் பேசும்போது நிச்சயம் சுவாரஸ்யமாக இருக்கும்''  என்றார்.

மீண்டும் செவிலியர் பணி!

Advertisement

Advertisement

விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழ் பெற்றவர் ஜூலி.  இவர், அடிப்படையில் செவிலியர் ஆவார்.  பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு, திரைத்துறையில்  வாய்ப்புகிட்ட  செவிலியர் பணியில் இருந்து ஒதுங்கியிருந்தார். இந்த ஊரடங்கில் இவரது ரசிகர்கள் பலரும், அவரிடம் நீங்கள் ஏன் செவிலியர் தொழிலை செய்யாமல் சினிமாவில் கவனம் செலுத்துகிறீர்கள் என கேட்டு வந்தனர். 

இதற்கு பதிலளித்து பதிவிட்டிருந்தார் ஜூலி. ""அதில், செவிலியர் பணிக்கு மிகுந்த அர்ப்பணிப்பு உணர்வு தேவை. சினிமாவில் நடித்துக் கொண்டே செவிலியர் பணியையும் பார்க்கலாமே என சிலர் கேட்கிறார்கள். ஆனால், அது சாத்தியமில்லாதது. காரணம் பார்ட் டைமாக செய்யும்போது, சினிமாவுக்கு சென்றுவிட்டு திரும்ப நேரமாகிவிட்டால், நோயாளிகள் எனக்காக காத்திருப்பார்கள்.  ஆனால், அவர்களின் உயிரை பணயம் வைக்கமுடியாது'' என கூறியிருந்தார். இந்நிலையில், கரோனாவுக்காக அமெரிக்காவைச் சேர்ந்த "ஃபுளோரிடா போர்டு ஆஃப்  நர்ஸிங்' நிறுவனம் அவருக்கு சான்றிதழ் அளித்திருப்பதாகவும், அதன்மூலம் தான் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களை பராமரிக்கும் தகுதி பெற்றிருப்பதாகவும் பதிவேற்றியுள்ளார்.  இதை பார்த்த பலர், நீங்கள் மீண்டும் மக்கள் பணி செய்வதில் மகிழ்ச்சி, எப்போது துவங்கவிருக்கிறீர்கள் என கேள்வி எழுப்பியுள்ளனர்.

உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ளுங்கள்!

"பகல் நிலவு', "கடைக்குட்டி சிங்கம்', "இரட்டை ரோஜா'  உள்ளிட்ட தொடர்களில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் நடிகை ஷிவானி நாராயணன். கரோனா பரவலைத் தடுக்கும் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளதால் வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்கிறார்.  அதே சமயம், சமூக வலைதளங்கள் மூலமாக ரசிகர்களுடன் தொடர்பில் இருக்கிறார் ஷிவானி. 

இந்நிலையில்  ஷிவானி 4 வருடங்களுக்கு முன்னர் இருந்த நிலையும், தற்போது இருக்கும் நிலையும் என குறிப்பிட்டு வெளியிட்டுள்ள புகைப்படம் வலைதளத்தில் வைரலாகியுள்ளது. 

இதையடுத்து, அவர் விதவிதமான உடைகளை அணிந்து புகைப்படங்களை இன்ஸ்டாவில்  வெளியிட்டு வருகிறார். அவ்வப்போது, நடனமாடியும், உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களையும்  வெளியிடுவதே தற்போது, ஷிவானியின் அன்றாட பணிகளில் ஒன்றாக மாறிவிட்டது எனலாம். இது  இந்த கரோனா லாக்டௌன் சமயத்தில் இவரது ரசிகர்களுக்கும்  பொழுது போக்காக மாறிவிட்டது.  அவர் கூறுகையில்,  ""தொடர் உடற்பயிற்சியின் மூலம் என் உடல் எடையைக் குறைக்க முடிந்துள்ளது. இதை எப்படி செய்தேன் எனத் தெரியவில்லை. ஆனால், என்னால் செய்ய முடிகிறது என்றால் நிச்சயம் உங்களாலும் முடியும். எனவே, தினமும் உடற் பயிற்சி செய்வதை வழக்கமாக கொண்டு உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ளுங்கள்''  என குறிப்பிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments