முகப்பு
மகளிர்மணி

பசலைக்கீரையின் பயன்கள்...

குளிர்ச்சித் தரும் கீரைகளில் பசலைக்கீரை சிறப்பான ஒன்று. இதில் வைட்டமின் ஏ, பி மற்றும் சி என்ற உயிர்ச் சத்துகளுடன் புரதம், சுண்ணாம்பு மற்றும் இரும்புச் சத்துகளும் உள்ளன.

Updated On : 19 பிப்ரவரி 2021, 4:56 pm IST
பகிர்:

குளிர்ச்சித் தரும் கீரைகளில் பசலைக்கீரை சிறப்பான ஒன்று. இதில் வைட்டமின் ஏ, பி மற்றும் சி என்ற உயிர்ச் சத்துகளுடன் புரதம், சுண்ணாம்பு மற்றும் இரும்புச் சத்துகளும் உள்ளன.

இந்தக் கீரையைச் சமைக்காமலேயே இதன் தளிர்களை பச்சையாகவே வாயிலிட்டு மென்று சாப்பிடலாம்.
உஷ்ணத்தினால் நீர்க்கடுப்பு, நீர்ச்சுருக்கு இருந்தாலும் போய்விடும்.

ரத்த சோகையுள்ளவர்கள் இந்தக் கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டு வர நோய்குணமாகும்.

Advertisement

Advertisement

ருசியின்மையைப் போக்கி, பசியை உண்டாக்கும். உணவை எளிதில் ஜீரணமடையச் செய்யும்.

பித்த சம்பந்தமான வாந்தி, கிறுகிறுப்பு போன்ற தொல்லைகளை அகற்றும். எந்த வயதினரும் இந்தக் கீரையைச் சாப்பிடலாம்.

சிறுநீர் சம்பந்தப்பட்ட தொல்லைகளை நீக்கும். நீர்த்தாரையில் கடுப்பு, எரிச்சல் இருந்தால் குணமாகும்.

சில பெண்கள் வெள்ளைப் படுதல் நோயால் அவதிப்படுவர். அவர்கள் இக்கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வரகுணமாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.