ரீ எண்ட்ரியாகும் நிஷா!
சின்னத்திரையில் தொகுப்பாளினி, நடிகை எனப் பன் முகம் கொண்டவர் நிஷா.
சின்னத்திரையில் தொகுப்பாளினி, நடிகை எனப் பன் முகம் கொண்டவர் நிஷா.
பெரியதிரையிலும் ஒரு சில படங்களில் நடித்து வந்த நிஷா, 5 ஆண்டுகளுக்கு முன்பு, நடிகர் கணேஷ் வெங்கட்ராமை திருமணம் செய்து கொண்டு திரைத்துறையில் இருந்து விலகியிருந்தார். இந்நிலையில் தற்போது மீண்டும் சின்னத்திரையில் ரீ எண்ட்ரி கொடுக்கிறார் நிஷா.
கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'அபி டெய்லர்' தொடரில் நடிக்கவுள்ளார் நிஷா. இதில் அவர், கெஸ்ட் ரோலில் வருகிறாரா அல்லது கேரக்டர் ரோலில் நடிக்கிறாரா என்பது குறித்த அதிகாரப் பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. ஏற்கெனவே இந்தத் தொடரில் 'பாரதி கண்ணம்மா' தொடரில் வில்லியாக நடித்து வரும் ஃபரினா வில்லியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.