வெல்ல இடியாப்பம்
அடிகனமான வாணலியில் 3 கப் தண்ணீர் ஊற்றிக் கொதித்ததும் இடியாப்ப மாவைக் கொட்டி, கட்டி விடவும்.
தேவையானவை:
இடியாப்ப மாவு- 2 கிண்ணம்
வெல்லம்- ஒரு கிலோ
தேங்காய்த் துருவல்- 4 தேக்கரண்டி
ஏலப்பொடி- சிறிதளவு
நெய் - 3 தேக்கரண்டி
உடைத்த முந்திரி- 2 தேக்கரண்டி
செய்முறை:
Advertisement
Advertisement
அடிகனமான வாணலியில் 3 கப் தண்ணீர் ஊற்றிக் கொதித்ததும் இடியாப்ப மாவைக் கொட்டி, கட்டி விடவும். இந்த இடியாப்ப மாவை இடியாப்பச் சூழலில் நிரப்பி இட்லித் தட்டுகளில் இடியாப்பமாகப் பிழிந்து, வெந்ததும் வெளியே எடுத்து ஆறவிடவும். பின்னர், உதிர்த்துக் கொள்ளவும்.
அடிகனமான பாத்திரத்தில் வெல்லத்தை நசுக்கிப் போட்டு ஒரு தேக்கரண்டி நீர் விட்டு, தேங்காய்த் துருவலும் சேர்த்துப் பாகு வைக்கவும். ஒரு கம்பிப் பதம் பாகு வந்ததும் கீழே இறக்கி, ஏலப்பொடி, நெய்யில் வறுத்த முந்திரியைச் சேர்க்கவும். உதிர்த்து வைத்துள்ள இடியாப்பத்தை இதனுடன் சேர்த்தால், வெல்ல இடியாப்பம் தயார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.