முகப்பு
மகளிர்மணி

சின்னத்திரை மின்னல்கள்!: டாப் 10 - இல் ரோஜா!

பொதுவாக சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் தொடர்கள் அவற்றின் கதைக்களம், கதாப்பாத்திர தேர்வு, அனுபவம் மிக்க இயக்குநர் போன்ற காரணங்களினால்  ரசிகர்களின் ஆதரவை பெறுகிறது.

Updated On : 2 மார்ச் 2022, 6:00 am IST
பகிர்:


பொதுவாக சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் தொடர்கள் அவற்றின் கதைக்களம், கதாப்பாத்திர தேர்வு, அனுபவம் மிக்க இயக்குநர் போன்ற காரணங்களினால் ரசிகர்களின் ஆதரவை பெறுகிறது. இதைத்தவிர, ஒரு தொடர் எந்தவிட தடையுமின்றி நீண்டநாள்கள் ஒளிபரப்பாக அந்த தொடருக்கு டி.ஆர்.பி ரேட்டிங் என்பது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இந்த டி.ஆர்.பி ரேட்டிங் என்பது முன்னிலையில் இருந்தால்தான் அந்த தொடர் ஒளிபரப்பாகும் சேனலுக்கு லாபம் கிடைக்கும். எனவே, டி.ஆர்.பி ரேட்டிங்கை உயர்த்துவதற்கு அனைத்து தொடர்களின் தயாரிப்புகளும் முயற்சி செய்யும். இந்த வகையில் சமீபகாலமாக, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் "பாரதி கண்ணம்மா', "பாக்கியலட்சுமி', "ராஜா ராணி' போன்ற தொடர்கள் டி.ஆர்.பி ரேட்டிங்கில் முன்னிலை வகித்து வந்தது.

இதே போன்று சன் தொலைகாட்சியின் "ரோஜா', "வானத்தைப் போல', "எதிர் நீச்சல்' போன்ற தொடர்களும் டி.ஆர்.பி ரேட்டிங்கில் முன்னிலையில் இருக்கக் கூடிய தொடர்களாகும். இதைத்தவிர, அவ்வப்போது, ஜீ தொலைக்காட்சி மற்றும் கலர்ஸ் தமிழ் ஆகிய சேனல்களின் தொடர்களும் முன்னிலையில் வருவதுண்டு.

அந்த வகையில், தற்போது தேசிய அளவிலான டி.ஆர்.பி ரேட்டிங்கில் தமிழ் தொடரான "ரோஜா தொடர்', டாப் 10 இந்திய சீரியல் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. இந்த அங்கீகாரம் இதுவரை, வேறு எந்த தமிழ் தொடருக்கும் கிடைத்ததில்லை என சன் தொலைக்காட்சியின் ஃபேன் கிளப் என்ற இன்ஸ்டாகிராம் இணையப்பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இது "ரோஜா' தொடரின் குழுவுக்கும், அந்தத் தொடரின் ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.