FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மகளிர்மணி

மனசே ரிலாக்ஸ்..!

Updated On : 18 பிப்ரவரி 2024, 12:00 am IST
பகிர்:

பிரச்னை வந்தால் தூக்கி ஒரு ஓரமா போடுங்கள். அதுவே சரியாயிடும். இதற்கு ஒரு குட்டிக்கதை.

ஆசிரியை வகுப்பறைக்குள் நுழைந்தார். மேஜை மீதிருந்த கண்ணாடி டம்ப்ளரை எடுத்து தூக்கிக் காட்டி, மாணவர்களிடம் பேசினார்.

""இது எவ்வளவு வெயிட் இருக்கும்?''

Advertisement

Advertisement

""நூறு கிராம், ஐம்பது கிராம்..'' என்று மாணவர்கள் ஆளாளுக்கு ஒரு எடையை சொன்னார்கள்.

""இதோட சரியான எடை எனக்கும் தெரியாது. ஆனா என்னோட கேள்வி அதுவல்ல..'' என்ற ஆசிரியை தொடர்ந்தார்.

""இதை அப்படியே நான் கையிலே பிடிச்சிக்கிட்டிருந்தேன்னா என்ன ஆகும்?''

""ஒண்ணுமே ஆகாது மேடம்...''

""வெரிகுட். ஆனா ஒரு மணி நேரம் இப்படியே பிடிச்சிக்கிட்டிருந்தேன்னா..?''

""உங்க கை வலிக்கும்...''

""ஒருநாள் முழுக்க இப்படியே வெச்சிருந்தேன்னா..?''

""உங்க கை அப்படியே மரத்துடும்..''

""வெரி.. வெரி குட். ஒரு மணி நேரத்துலே என் கை வலிக்கறதுக்கும், ஒரு நாளிலே மரத்துப் போகிற அளவுக்கு மாறுறதுக்கு இந்த டம்ப்ளரோட வெயிட் கூடிக்கிட்டே போகுமா என்ன?''

""இல்லை மேடம்.... அது வந்து...''

""எனக்கு கை வலிக்காம, மரத்துடாம ஆகணும்னா நான் என்ன பண்ணனும்?''

""கிளாஸை உடனே கீழே வெச்சுடணும்..''

""நூறு சதவீதம் உண்மை. இந்த கிளாஸ்தான் பிரச்னை. ஒரு பிரச்னை நமக்கு வந்ததுன்னா அதை அப்படியே மண்டைக்கு ஏத்தி ஒரு மணி நேரம் வெச்சிருந்தோம்னா வலிக்க ஆரம்பிக்கும். ஒரு நாள் முழுக்க அப்படியே வெச்சிருந்தா மூளை செயலிழந்து மரத்துடும். அதனாலே உங்களுக்கு ஏதாவது பிரச்னை வந்துடிச்சின்னா தூக்கி ஓர் ஓரமா கடாசிடுங்க. அதுவே சரியாயிடும். சரியா? இதுதான் மனவியல் ரீதியிலான தீர்வு.'' என்று முடித்தார் ஆசிரியை.

மாணவர்கள் கரவொலி எழுப்பினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments