ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ. 35-க்கு வாங்க வேண்டிய அவசியம் என்ன? அரசுக்கு பிரேமலதா கேள்வி
மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, மின்சார உற்பத்தியை அதிகரிப்பதற்கான புதிய திட்டங்களை அரசு உடனடியாகச் செயல்படுத்த வேண்டும்.
தனியாரிடம் ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ. 35-க்கு வாங்க வேண்டிய அவசியம் என்ன? என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று (அக். 13) கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக பிரேமலதா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
''கடந்த காலங்களில் ஒரு யூனிட் மின்சாரந்தை ரூ.13-க்கு கொள்முதல் செய்த நிலையில், மின்மிகை மாநிலமாக இருந்த தமிழ்நாட்டில் தற்போது ஒரு யூனிட் மின்சாரத்தைத் தனியாரிடம் இருந்து ரூ.35-க்கு கொள்முதல் செய்ய வேண்டிய அவசியம் என்ன?
Advertisement
Advertisement
தமிழ்நாடு எந்தத் திசையை நோக்கிச் செல்கிறது என்ற கேள்வியை இன்று மக்கள் எழுப்பி வருகின்றனர்.
ஒருபுறம் மின்வெட்டு, மறுபுறம் மின்கட்டண உயர்வு என மக்கள் பல்வேறு சிரமங்களைச் சந்தித்து வரும் நிலையில், தனியாரிடம் இருந்து ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ. 35 என்ற அதிக விலைக்கு வாங்குவது எந்த வகையில் நியாயமானது?
இதற்குத் தமிழக அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும். ஏற்கனவே மின்சாரத் துறை கடன் சுமையில் இருக்கும் நிலையில், தமிழ்நாடு சுமார் ரூ. 10 லட்சம் கோடி கடனில் இருப்பதாகக் கூறப்படும் சூழலில், தனியாரிடம் தொடர்ந்து அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்குவதன் மூலம் மேலும் நிதிச்சுமையை ஏற்படுத்துவது எதற்காக?
இந்தக் கொள்முதல் நடவடிக்கையின் அவசியம், விலை நிர்ணயம் மற்றும் அதன் பின்னணியில் உள்ள காரணங்கள் குறித்து அரசு வெளிப்படையாக விளக்க வேண்டும்.
தமிழக மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, மின்சார உற்பத்தியை அதிகரிப்பதற்கான புதிய திட்டங்களை அரசு உடனடியாகச் செயல்படுத்த வேண்டும்.
மின் உற்பத்தித் திட்டங்களை முன்னெடுப்பதை விடுத்து, மின்கட்டணத்தை உயர்த்துவதும், மின்வெட்டுக்கு வழிவகுப்பதும், தனியாரிடம் அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்குவதும் மக்களின் சுமையை மேலும் அதிகரிக்கும்.
மக்களின் வரிப்பணத்தையும், மாநிலத்தின் நிதிநிலையையும் கருத்தில் கொண்டு, மின்சார உற்பத்தியைப் பெருக்கி, நியாயமான விலையில் தடையற்ற மின்சாரம் வழங்குவதே அரசின் கடமையாகும்'' என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
What is the necessity to purchase a unit of electricity for Rs. 35? Premalatha questions the government.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.