மாங்காய் சட்னி
மாங்காயை நன்றாகக் கழுவி பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
தேவையான பொருள்கள்:
மாங்காய் -2
காய்ந்த மிளகாய் -8
Advertisement
வெந்தயம், தனியா, கடுகு, உளுந்தம்பருப்பு, பெருங்காயப்பொடி, மஞ்சள் பொடி -ஒரு தேக்கரண்டி
எண்ணெய், உப்பு -தேவையானவை
செய்முறை:
மாங்காயை நன்றாகக் கழுவி பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் வற்றல் மிளகாய், வெந்தயம், தனியா, பெருங்காயப் பொடி ஆகியவற்றைப் போட்டு வறுத்து எடுக்க வேண்டும். உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
அரைத்து முடிக்கும் முன் நறுக்கிய மாங்காயைச் சேர்த்து நன்றாக கலந்து அரைக்க வேண்டும். உளுந்தம் பருப்பு, கடுகு ஆகியவற்றை வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் போட்டு தாளித்து இதில் சேர்க்க வேண்டும். அரைத்த விழுதை வாணலியில் போட்டு சுருளக் கிளறி இறக்கினால் மாங்காய்ச் சட்னி தயார்.
இரண்டு நாள்கள் ஆனாலும் இது கெடாது. மாங்காய்ச் சட்னி இட்லி, தோசை போன்றவைகளுக்கு வைத்து சாப்பிட சுவையாக இருக்கும்.