FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

குதிரைவாலி கருப்பட்டி ஆப்பம்

முதலில் குதிரைவாலியுடன் கார அரிசி, உளுந்து, வெந்தயம் சேர்த்து 2 மணி நேரம் ஊற வைத்து, நைசாக அரைக்கவும்.

குதிரைவாலி கருப்பட்டி ஆப்பம்
பகிர்:

தேவையான பொருள்கள்

குதிரைவாலி, கார அரிசி -தலா ஒரு கிண்ணம்

உளுந்து - கால் கிண்ணம்

Advertisement

Advertisement

வெந்தயம் - ஒரு தேக்கரண்டி

கருப்பட்டி - இரண்டு கிண்ணம்

புளித்த இளநீர் -அரை கிண்ணம்

செய்முறை:

முதலில் குதிரைவாலியுடன் கார அரிசி, உளுந்து, வெந்தயம் சேர்த்து 2 மணி நேரம் ஊற வைத்து, நைசாக அரைக்கவும். புளித்த இளநீரை அரைத்துவைத்துள்ள மாவுடன் கரைத்து 6 மணி நேரம் புளிக்க விடவும்.

கருப்பட்டியில் சிறிது தண்ணீர் சேர்த்துக் கரைத்து அடுப்பில் வைத்து, கொதித்ததும் அப்படியே சூடாக வடிகட்டி மாவுடன் சேர்க்கவும். ஆப்பச் சட்டியை அடுப்பில் வைத்து லேசாக எண்ணெய் தடவி, தேவையான மாவை ஊற்றி மூடி வைத்து வேக விடவும். ஓரங்களில் முறுகலாகவும், நடுவில் மெத்தென்று பஞ்சு போன்றும் சுட்டு எடுக்கவும்.

நாகஜோதி கிருஷ்ணன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments