முகப்பு

தேங்காய் அடை

புழுங்கல் அரிசியைத் தண்ணீரில் இரண்டு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

28 நவம்பர் 2026, 10:09 pm
தேங்காய் அடை
தேங்காய் அடை
பகிர்:

தேவையான பொருள்கள்:

புழுங்கல் அரிசி - 500 கிராம்

முழு உளுந்து, துவரம்பருப்பு - தலா 100 கிராம்

Advertisement

Advertisement

மிளகாய் வற்றல் - 10

பெருங்காயப் பொடி - ஒரு தேக்

கரண்டி

தேங்காய் - அரை மூடி

உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

புழுங்கல் அரிசியைத் தண்ணீரில் இரண்டு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பருப்பு வகைகளையும் தண்ணீரில் ஊற வைத்து, பின்னர் புழுங்கல் அரிசி, பருப்பு வகைகளை நன்கு களைந்து தண்ணீரை வடிகட்டி, கிரைண்டரில் போட்டு அரைக்க வேண்டும்.

அரைக்கும்போது மிளகாய் வற்றல், பெருங்காயப் பொடி, சிறிது கறிவேப்பிலை, உப்பு ஆகியன சேர்த்து மசிய அரைக்காமல் ஒன்றிரண்டாக அரைத்து, தேங்காய்த் துருவலையும் அதனுடன் சேர்த்து நன்றாகக் கலக்க வேண்டும். அடுப்பில் அடைக் கல்லைப் போட்டு காய்ந்ததும், அதில் அடைமாவை ஒரு கரண்டியில் எடுத்து வட்டமாக ஊற்றி, ஒரு தேக்கரண்டி எண்ணெயை விட்டு வேக வைத்து எடுக்க வேண்டும்.

ஆர். ஜெயலெட்சுமி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.