கோதுமை அதிரசம்
வாணலியை அடுப்பில் வைத்து, தண்ணீர் ஊற்றிக் காய்ந்ததும், அதில் வெல்லத்தைப் பொடி செய்து போட்டு கரைந்ததும், அதில் உள்ள மண்ணை வடிகட்டவேண்டும்.
தேவையான பொருள்கள்:
கோதுமை மாவு - 400 கிராம்
வெல்லம் - 300 கிராம்
Advertisement
Advertisement
ஏலக்காய்ப் பொடி - 2 தேக்கரண்டி
நெய் - தேவையான அளவு
செய்முறை:
வாணலியை அடுப்பில் வைத்து, தண்ணீர் ஊற்றிக் காய்ந்ததும், அதில் வெல்லத்தைப் பொடி செய்து போட்டு கரைந்ததும், அதில் உள்ள மண்ணை வடிகட்டவேண்டும். மீண்டும் வெல்லத் தண்ணீரை வாணலியில் ஊற்றி, அடுப்பில் வைத்துக் கொதி வந்ததும், கோதுமை மாவை அதில் போட்டுக் கிளறி கீழே இறக்கி மூடி வைக்க வேண்டும்.
சூடு சிறிது ஆறியதும் ஏலக்காய்ப் பொடியை போட்டு பிசைந்துகொள்ள வேண்டும். பிறகு எலுமிச்சம் பழ அளவு உருண்டைகளாக உருட்டி வாழை இலையில் வடை போல தட்டி வைத்துக் கொள்ள வேண்டும். வாணலியை அடுப்பில் வைத்து நெய்யை ஊற்றிக் காய்ந்ததும் வடை போல் தட்டிய அதிரசத்தை அதில் போட்டு பொன்னிறமாக வேக வைத்து எடுக்க வேண்டும்.
ஆர். ஜெயலெட்சுமி