சுவையான பூண்டுக்கு...
சட்னி, சாம்பார், ரசம், ஊறுகாய் என அனைத்திலும் பயன்படுத்தப்படும் பூண்டு, சமையல் கூடங்களில் அத்தியாவசியப் பொருளாக உள்ளது.
சட்னி, சாம்பார், ரசம், ஊறுகாய் என அனைத்திலும் பயன்படுத்தப்படும் பூண்டு, சமையல் கூடங்களில் அத்தியாவசியப் பொருளாக உள்ளது. இந்தச் சிறப்புவாய்ந்த பூண்டுகள் நாடு முழுவதும் விவசாயம் செய்யப்பட்டாலும், மத்தியப் பிரதேசத்தில் உள்ள மண்டசூர் என்ற நகரத்துக்கு 'பூண்டு நகரம்' என்ற சிறப்புப் பெயர் உண்டு.
இங்குள்ள விவசாயிகளுக்கு பூண்டு உற்பத்தியே முக்கிய வருமான ஆதாரமாகும். இங்கு உற்பத்தியாகும் பூண்டுகளின் சுவை, நல்ல தரமான பற்கள் போன்றவை நீண்ட நாள் சேமித்து வைக்கும் தன்மைக்கும் பெயர் போனது. இந்தப் பகுதியின் மண்ணும் கால நிலையும் அதன் சாகுபடிக்கு மிகவும் ஏற்றதாக உள்ளதால், இங்கு உற்பத்தியாகும் பூண்டுகளை நீண்ட காலத்துக்குச் சேமிக்கவும் முடிகிறது.
மத்தியப் பிரதேசத்தில் 'ஒரு மாவட்டத்துக்கு ஒரு பொருள்' என்ற அடிப்படையில் மண்டசூர் மாவட்டத்தில் பூண்டு முக்கியப் பொருளாகத் தேர்வு செய்யப்பட்டு விசேஷ கவனம் செலுத்தப்படுகிறது.
Advertisement
Advertisement
பூண்டுத் தூள், பூண்டு எண்ணெய், பூண்டு ஊறுகாய், உலர்த்தப்பட்ட செதில்கள் போன்றவையாகத் தயாரிக்கப்பட்டு இங்கிருந்து நாடு முழுவதும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது.