FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

இரு குழந்தைகளுக்கு மேல் பெற்றாலும் அரசுப் பணி! கட்டுப்பாட்டில் தளர்வு

இரு குழந்தைகளுக்கு மேல் பெற்றாலும் அரசுப் பணிக்கு வின்ணப்பிக்கலாம் என்பது குறித்து...

14 வினாடிகள் முன்பு
மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ் - கோப்புப்படம்
பகிர்:

இரு குழந்தைகளுக்கு மேல் பெற்றாலும் அரசுப் பணிக்கு வின்ணப்பிக்கலாம் என மத்தியப் பிரதேச அரசு அறிவித்துள்ளது.

மத்தியப் பிரதேசத்தில் கடந்த 2001, ஜனவரி 26 முதல் இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றிருந்தால் அவர்கள் அரசுப் பணிக்கு விண்ணப்பிக்க முடியாது என்ற விதி இருந்து வந்தது. அப்போதைய அரசு, மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த விதியை அமல்படுத்தியது.

Advertisement

Advertisement

மேலும், அரசு வேலையில் இருக்கும்போது இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக் கொண்டால், அவர்களுக்கான ஊதிய உயர்வு நிறுத்தம் அல்லது பணி நீக்கம் போன்ற ஒழுங்கு நடவடிக்கைகளுக்கு அரசு ஊழியர்கள் உட்படுத்தப்பட்டனர்.

இந்த நிலையில், முதல்வர் மோகன் யாதவ் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த கட்டுப்பாட்டுகளை தளர்த்துவதற்கான புதிய விதிக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

இதனால், இரு குழந்தைகளுக்கு மேல் பெற்றாலும் அரசுப் பணிக்கு விண்ணப்பிக்க முடியும். அதேவேளையில், இந்தக் காரணங்களுக்காக நிலுவையில் உள்ள அனைத்து விசாரணைகளும் ரத்து செய்யப்படுகின்றன என்றும் அரசு தெரிவித்துள்ளது.

இருப்பினும், ஏற்கெனவே இந்த விதியை மீறியவர்கள் மீது விசாரணை நடத்தப்பட்டு, இறுதித் தண்டனை வழங்கப்பட்டிருந்தால் அவர்களுக்கு இந்தத் தளர்வு பொருந்தாது.

25 ஆண்டுகால விதியை மாற்றி அமைத்ததன் மூலம், மத்தியப் பிரதேசத்தில் இந்த விதியால் பாதிக்கப்பட்டிருந்த மக்கள் பயன்பெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

summary

The Madhya Pradesh government has announced that individuals with more than two children are eligible to apply for government jobs.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.