எழுத்தாளினி!
தற்போதைய உலகில் புத்தக வாசிப்பை எட்டிக்காயாகக் கருதும் இளைய தலைமுறையினருக்கு மத்தியில் கவிதை, கட்டுரை, கதைகளை எழுதி, அதனை புத்தகமாக வெளியிட்டுள்ளார் ஒன்பதாம் வகுப்பு மாணவி கே.ஏ.சந்தோஷி.
தற்போதைய உலகில் புத்தக வாசிப்பை எட்டிக்காயாகக் கருதும் இளைய தலைமுறையினருக்கு மத்தியில் கவிதை, கட்டுரை, கதைகளை எழுதி, அதனை புத்தகமாக வெளியிட்டுள்ளார் ஒன்பதாம் வகுப்பு மாணவி கே.ஏ.சந்தோஷி.
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் படித்துவரும் அவரிடம் பேசியபோது:
'பள்ளிப்படிப்போடு ஆங்கில நாவல்கள், இலக்கியம் சார்ந்த புத்தகங்கள், தமிழ் மொழியை மேம்படுத்தும் நாளிதழ்கள் போன்றவற்றை வாசிப்பதில் ஆர்வம் ஏற்பட்டது. அதன்பிறகு, கதை, கவிதை, கட்டுரை என எழுதினேன்.
Advertisement
Advertisement
தமிழ் வழியில் அல்லாமல் ஆங்கில மொழியில் எழுதுவது சற்று எளிதாக இருந்தது. அதற்காக தமிழை புறக்கணிக்கவில்லை. தாயும், தமிழ் மொழியும் எனக்கு ஒன்றுதான்.
குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றும் அப்பா கே.ஜே.அங்கப்பராஜ், பள்ளிப்பாளையம் ஆலங்காட்டுவலசு ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியையான எனது அம்மா என்.காஞ்சனப்பிரியா ஆகியோர் கொடுத்த ஊக்கமும், பயிற்சியும்தான் எழுத்துலகில் நான் காலடி எடுத்து வைக்க முதல் படியாக அமைந்தது.
ஏழாம் வகுப்பு படித்தபோது சென்னையில் இலக்கிய மன்றம் நடத்திய கதை கூறுதல் போட்டியில் மாநில அளவில் முதலிடம் பிடித்தேன். அங்கிருந்த ஆசிரியை பிருந்தா என்பவர் புத்தக வாசிப்பு, கற்பனைத் திறன், கதை, கவிதை, கட்டுரைகளை எழுதுவது, புத்தகமாக வடிப்பது போன்ற பயிற்சிகளை வழங்கி, என்னை ஊக்கப்படுத்தினார்.
நான் எழுதிய 50 கவிதைகள் ஒரே தொகுப்பாக ‘அமதஞதஅ ஞஊ
பஏஞமஎஏபந' என்ற பெயரில் புத்தகமாக வெளியானது. அதேபோல், வாழ்வியலுக்குத் தேவையான நீதிக்கதைகள், சுற்றுச்சூழல், வாழ்வியல் நடத்தைகள் ஆகியவற்றைத் தொகுத்து ‘உமடஏஞதஐஅ ஐச ஐசஓ' என்ற பெயரில் மற்றொரு புத்தகம் வெளியாகி உள்ளது'' என்றார் சந்தோஷி.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.