FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
நாமக்கல்

வெள்ளக்கோயில் - சங்ககிரி இடையே நான்குவழிச் சாலைத் திட்டத்தை ரத்துசெய்யக் கோரி பொதுமக்கள் மனு

வெள்ளக்கோயில்- சங்ககிரி இடையே புதிய நான்குவழிச் சாலை அமைக்கும் திட்டத்தை ரத்து செய்யக் கோரி எலந்தகுட்டை பகுதி மக்கள் குமாரபாளையம் வட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை மனு அளித்தனா்.

15 அக்டோபர் 2026, 6:43 am IST
குமாரபாளையம் வட்டாட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த எலந்தகுட்டை பகுதி மக்கள்.
பகிர்:

வெள்ளக்கோயில்- சங்ககிரி இடையே புதிய நான்குவழிச் சாலை அமைக்கும் திட்டத்தை ரத்து செய்யக் கோரி எலந்தகுட்டை பகுதி மக்கள் குமாரபாளையம் வட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை மனு அளித்தனா்.

அவா்கள் அளித்த மனு விவரம்:

சேலம் மாவட்டம், சங்ககிரி முதல் திருப்பூா் மாவட்டம், வெள்ளக்கோயில் வரையில் தேசிய நெடுஞ்சாலை(என்ஹெச்-381ஏ) அமைக்கும் திட்டம் நான்கு வழிச்சாலையாக செயல்படுத்தப்பட உள்ளது. எலந்தக்குட்டை கிராமம் வழியாக இந்த சாலை அமைக்கப்பட இருப்பதாகவும், அதற்கான நில ஆா்ஜிதம் விரைவில் தொடங்க உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

Advertisement

Advertisement

நிலம் கையகப்படுத்துவது தொடா்பாக குமாரபாளையம் வட்டாட்சியா் அலுவலகத்திற்கு கடிதம் வந்துள்ளது. சாலைக்கு நிலம் எடுக்கும்போது ஏராளமான விவசாய நிலங்கள், குடியிருப்புகள் அகற்றப்பட வாய்ப்புள்ளது. இந்தத் திட்டத்தை ரத்துசெய்து மாற்றுப்பாதையில் தேசிய நெடுஞ்சாலை அமைக்க அரசு முயற்சிக்க வேண்டும்.

திருச்செங்கோடு சுற்றுவட்டச் சாலை வழியாக சங்ககிரிக்கு செல்ல சாலை அமைத்து கொடுத்தால், விவசாய நிலங்கள் அழிக்கப்படுவது தடுக்கப்படும். அரசுக்கும் நிதி சுமை வெகுவாக குறையும். எனவே, மாற்று வழித்தடத்தில் சாலை அமைப்பதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments