FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ஆஸ்கருக்குச் செல்லும் இளையராஜா இசை!

கடந்த ஆண்டு மராத்தி மொழியில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற படம் 'கோந்தல்'. அறிமுக இயக்குநரான சந்தோஷ் திவாகர் இயக்கியிருந்தார்.

26 செப்டம்பர் 2026, 9:27 pm IST
இளையராஜா
பகிர்:

கடந்த ஆண்டு மராத்தி மொழியில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற படம் 'கோந்தல்'. அறிமுக இயக்குநரான சந்தோஷ் திவாகர் இயக்கியிருந்தார். இஷிதா தேஷ்முக், கிஷோர் கதம், யோகேஷ் சொஹோனி உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.

மகாராஷ்டிர கிராமம் ஒன்றில் நடைபெறும் கோந்தல் எனும் பாரம்பரிய சடங்குகளை மையமாகக் கொண்டு இந்தப் படம் உருவானது. 'கோந்தல்' என்பது புகழ்பெற்ற ஒரு பாரம்பரிய நாட்டுப்புறக் கலை, வழிபாட்டு முறையாகும்.

கடந்த ஆண்டு திரையரங்குகளில் வெளியான இப்படம் பல்வேறு திரைப்பட விழாக்களில் பங்கேற்று விருதுகளை வென்றுள்ளது. 56-ஆவது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த இயக்குநருக்கான வெள்ளி மயில் விருது வென்றது.

Advertisement

Advertisement

இந்நிலையில், அடுத்த ஆண்டு (2027) நடைபெறவுள்ள 99-வது ஆஸ்கர் விருதுகளுக்கான போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்க 'கோந்தல்' திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. 'சிறந்த சர்வதேச திரைப்படம்' பிரிவில் இந்தியாவின் அதிகாரபூர்வ நுழைவாக இந்தப் படம் ஆஸ்கருக்குச் செல்கிறது.

மராத்தி சினிமா வரலாற்றில் ஆஸ்கர் விருதுக்கு தேர்வு செய்யப்படும் 4-ஆவது திரைப்படம் இதுவாகும்.

இந்தத் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடல் 'மராட்டியர்களை இசையால் கட்டிப்போட்டது' என்று இளையராஜாவைப் பாராட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

இந்தப் படத்துக்கு இளையராஜாதான் இசை அமைக்கவேண்டும் என்று இயக்குநர் சந்தோஷ் திவாகர் விடாப்பிடியாக வலியுறுத்தியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments