முகப்பு
சிறுவர்மணி

சிறுவர் பாடல்: தாய் மொழியே! தமிழ் மொழியே!

தாய் மொழியே எங்கள் தமிழ் மொழியே தாலாட்டுப் பாடிய தாய் மொழியே வாய்மொழி பேசியே வளர்த்தவள் தாய் வாழ்வெலாம் தமிழ் உணர்த்தியவள் தாய்! வள்ளுவர் இளங்கோ கம்பரென வாழ்ந்தவர் காவியம் படைத்த மொழி துள்ளிடும் இசை ந

Updated On : 27 டிசம்பர், 2023 at 4:26 PM
பகிர்:

தாய் மொழியே எங்கள் தமிழ் மொழியே

தாலாட்டுப் பாடிய தாய் மொழியே

வாய்மொழி பேசியே வளர்த்தவள் தாய்

Advertisement

வாழ்வெலாம் தமிழ் உணர்த்தியவள் தாய்!

வள்ளுவர் இளங்கோ கம்பரென

வாழ்ந்தவர் காவியம் படைத்த மொழி

துள்ளிடும் இசை நயம் நிறைந்த மொழி

தூய நல் இலக்கணம் அமைந்த மொழி!

ஆண்டாள் ஒளவையார் பெண்புலவர்

அன்புடன் பேணிய எம்மொழியே

அணையா விளக்கே அகிலமெலாம்

சுடர்விடும் தமிழே செம்மொழியே!

நாவையே அசைத்துப் பேச வைக்கும்

நம் தமிழ் மொழியே செந்தமிழே

பாவையே எங்கள் தென்மொழியே

பாடுவோம் வாழிய செம்மொழியே!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments