கதைப்பாடல்: புத்தகக் கண்காட்சி
சென்னையில் புத்தகக் கண்காட்சி தீவுத் திடல் மைதானத்தில்
சென்னையில் புத்தகக் கண்காட்சி
தீவுத் திடல் மைதானத்தில்
என்ன அழகு? பல வண்ணம்!
Advertisement
ஏராளமாகப் புத்தகங்கள்!
குழந்தைப் பாடல்கள்! சிறுகதைகள்!
கூட்டம் ஏகம்! நீண்ட வரிசை!
பழமைச் சிறப்புப் புராணங்கள்!
பக்தி நூல்கள் கவிதைகள்!
கணினி நூல்கள் கணக்கின்றி
கண்களுக்கெட்டிய தூரம்வரை!
மணிமணியான அச்சடிப்பு!
மாபெரும் கூட்டம்! ஆம் காண்போம்!
காந்தி அப்துல் கலாம் நூல்கள்
கண்ணதாசனின் இந்து மதம்!
சாந்தி நல்கும் புத்தபிரான்
சரிதம் புனிதம்! வாங்கிடுவோம்!
அலைகள் வீசும் கடலருகே
தலைகள் கூடும் பெருங்காட்சி!
இலைகள் வீசும் மென்காற்று
இதமாய் இனிதாய்த் தவழ்கிறதே!
சென்னைப் புத்தகக் கண்காட்சி
தீவுத்திடலில் அமர்க்களமாய்!
கண்கொள்ளாத பெரும் காட்சி!
காண்போம் வாரீர் அழைக்கின்றேன்!