முகப்பு
சிறுவர்மணி

பொன்மொழிகள்!

படைக்கும் சக்தி ஒவ்வொரு மனிதனிடத்திலும் மறைந்து கிடக்கிறது. அதில் கால் பகுதியாவது உபயோகித்தால் போதும். நிச்சயம் வெற்றியே.

Updated On : 26 டிசம்பர் 2020, 9:40 pm IST
பகிர்:

படைக்கும் சக்தி ஒவ்வொரு மனிதனிடத்திலும் மறைந்து கிடக்கிறது. அதில் கால் பகுதியாவது உபயோகித்தால் போதும். நிச்சயம் வெற்றியே.
 - ஆஸ்கார் ஒயில்டு.

முகஸ்துதி என்பது வண்ணம் பூசப்பட்ட படைக்கலன் போன்றது. காட்சிப் பொருளாகத்தான் அது பயன்படும். காரியத்திற்கு உதவாது.
 - சாக்ரடீஸ்

அதிர்ஷட்டத்தைவிட  தன்னம்பிக்கை அதிக சாதனைகளைச் செய்யும்! 
- புரூஸ் பர்த்தட்டன்

Advertisement

Advertisement

பணிவு உன்னையும் அறியாமல் உன்னை உயர்த்திக்கொண்டிருக்கும். 
- லா ரோஷ்புக்கோ

தியாகியாக வாழ அதிக வல்லமை வேண்டும். 
- ஒரேகமான்

வெறுப்பை சகித்துக்கொள்வதைவிட,  எள்ளி நகையாடுவதை சகித்துக்கொள்வது கடினமானது. 
-  ஸிட்னிஸ்டித்

நல்லெண்ணம் எல்லாப் புண்களையும் ஆற்றும். 
- பிரான்சிஸ் பேக்கன்

சிறிய துயரங்கள் குரல் கொடுத்து முறையிடும். ஆழ்ந்த வருத்தங்களோ ஊமைகளாய் இருக்கும். 
- செனேகா

சட்டங்களே இல்லாதபோதும் நல்ல மனிதர்கள் நல் வாழ்க்கையைத்தான் நடத்துவார்கள். 
-அரிஸ்டோஃபனிஸ்

சொல்ல வேண்டியதைச் சொல்வது முக்கியம். அதிலும் அதை எப்படிச் சொல்வது என்பது அதைவிட முக்கியம். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments