பாடம் சொல்லும் சேவல்!
கொக்கரக்கோ சேவல் ஒன்றுகூவி நின்னுச்சாம் --அதுசெக்கச் சிவந்த கொண்டையோடு
கொக்கரக்கோ சேவல் ஒன்று
கூவி நின்னுச்சாம் --அது
செக்கச் சிவந்த கொண்டையோடு
சிலிர்ப்பைக் காட்டுச்சாம்
வீரநடைப் போட்டுகிட்டு
விழித்துப் பாத்துச்சாம்--அது
தீரமுடன் தரையைக்கிளறி
தீனித் தின்னுச்சாம்
நிறங்கள் பல கலந்திட்ட
நல்ல சட்டையை --அது
திறமையுடன் போட்டுக்கிட்டு
திரிந்து வந்துச்சாம்
Advertisement
Advertisement
குஞ்சுக்கோழி பறிக்கவந்த
கழுகு ஒன்றினை --அது
அஞ்சி விலகி பறந்திடவே
அடிச்சு விரட்டுச்சாம்
விடியல் வந்து விட்டதென
வாழ்த்து பாடுச்சாம்--அது
படிக்கும் காலைப் பொழுதென்று
பாடம் சொல்லுச்சாம்
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.