முகப்பு
சிறுவர்மணி

பொன்மொழிகள்

அன்பான செயல் மருந்தாகவும் இருக்கும். நல்ல வாழ்த்தாகவும் இருக்கும்.  

Updated On : 20 ஜூன் 2020, 4:39 pm IST
பகிர்:

அன்பான செயல் மருந்தாகவும் இருக்கும். நல்ல வாழ்த்தாகவும் இருக்கும்.   
-  கதே

இன்று நாம்  செய்யக்கூடிய நன்மைதான் நாளை நமக்கு நன்மை தரக்கூடியதாகும்.  
-  வில்லியம் பிளேக்

பரிதாபப்படும் நிலையில்  இருப்பதைவிட, மற்றவர்கள் புகழும் நிலையில் இருப்பது நல்லது.  
-  ஹெரோ டோடஸ்

Advertisement

Advertisement

எந்த நிகழ்ச்சியிலும் ஒரு படிப்பினை இருக்கிறது. படிப்பினையைக் கண்டுபிடிப்பது உன் புத்திசாலித்தனம். 
- தாமஸ் கார்லைல்

இடமும், நிலைமையும் முக்கியமல்ல..... மனம் மட்டுமே ஒருவனை இன்புறவோ, 
துன்புறவோ செய்கிறது.  
- எஸ்டிரேஞ்ச்

ஒரு நிமிடக் கோபம் ஓராயிரம் வருடப் புகழையும் அழித்துவிடுகிறது.  
- க்ளாரன்ஸ் டே

நல்ல விஷயங்களைக் கிரகித்து அவற்றை நம்மிடையே நிலை பெற்றிருக்கச் செய்வதுதான் நற்பண்பு.  
-  அரிஸ்டாட்டில்

இளம் வயதில் செய்யும் தவறுகளும், பாவங்களும் முதுமையில் அவமானமாகக் காட்சியளிக்கின்றன.  
- லாண்டன்

வாய்ச் சவடால் அடித்து வாக்குறுதி அளிப்பவனிடம் எதனையும் எதிர்பார்க்காதே.  
-  ரிச்டெர்

வாயைத் திறக்கும்போதெல்லாம் உள்ளத்தையும் சேர்ந்தே திறக்கிறோம்! எனவே கவனமாக இருத்தல் வேண்டும்.  
-  யங்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments