முகப்பு
சிறுவர்மணி

கடி

ஒரு கிலோவுக்கு எத்தனை கிராம்?மாணவன்: ரேஷன்லயா? மற்ற கடைகள்லயா மிஸ்...?

Updated On : 27 நவம்பர் 2021, 5:52 pm IST
பகிர்:


ஒருவன்: புக்கை கிழிக்கத்தானே முடியும்...  அந்தக் கோபு  "அண்ணன் உடைச்சிட்டான் இனிமே புக் பார்க்க முடியாது'ன்னு அழுவுறானே... ஏன்? 
மற்றவன்:  அதுவா? அவன் பார்த்தது ஃபேஸ்புக்.  உடைந்தது அவன் 
அண்ணனோட செல் ஃபோன்.

நாஞ்சில் சு. நாகராஜன் 
கன்னியாகுமரி மாவட்டம்.

பெரியவர்:  ""உன் பேரு என்ன பாப்பா?''
சிறுமி:  ""காவேரி''
பெரியவர்: ""ஸ்வீட் நேம்...''
சிறுமி:  ""ஸ்வீட் நேம் இல்ல தாத்தா... 
ரிவர் நேம்''

Advertisement

Advertisement

கே.இந்து குமரப்பன்,
விழுப்புரம்-605 602.

ஆசிரியை:  ஒரு கிலோவுக்கு எத்தனை கிராம்?
மாணவன்: ரேஷன்லயா? மற்ற கடைகள்லயா மிஸ்...?

வி.ரேவதி,
தஞ்சை.

அம்மா: கடைக்குப் போய் அப்பளப்பூ வாங்கிட்டு வாடா..''
மகன்: ""எத்தனை முழம் வாங்கணும்?''

ஏ. நாகராஜன்,
பம்மல்.

ராமு:  நான் "மண்டே' பிறந்தேன். 
நீ எப்படா பிறந்தே?
தினேஷ்: நான் "சண்டே' பிறந்தேன்.
ராமு: டூப் விடாதடா... அன்னிக்கு "லீவு' நாள்!

ஆர். சுந்தரராஜன்,
சிதம்பரம்.

ரசிகா: நம்ம டீச்சருக்கு என்னடி ஆச்சு?
ராகிணி:  ஏன்டி அப்படி கேக்குற...?
ரசிகா:  பாரேன்... போர்டுல திருக்குறளை அவங்களே எழுதிட்டு, இதை எழுதியது யாருன்னு நம்மைப் பார்த்துக் கேட்கறாங்க...
ராகிணி: ? ? ? ? ?

ஜோ. ஜெயக்குமார்,
நாட்டரசன்கோட்டை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments