FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

பாரம்பரிய விளையாட்டு ஒத்தையா? இரட்டையா?

தென்னிந்தியாவின் பாரம்பரிய விளையாட்டு, ஒத்தையா? இரட்டையா?

பகிர்:

வே. நடராஜன்

தென்னிந்தியாவின் பாரம்பரிய விளையாட்டு, ஒத்தையா? இரட்டையா? இது ஒருவரின் உள்ளுணர்வு, நிகழ்தகவுத் திறன் மற்றும் மனக்கணக்குப் போடும் திறனைச் சோதிக்க இயற்கைப் பொருள்களைப் பயன்படுத்தி விளையாடப்படுகிறது.

இரண்டு நபர்கள் விளையாடும் இந்த விளையாட்டுக்கு ஒரு கைப்பிடி புளியங்கொட்டைகள் தேவையானது.

Advertisement

Advertisement

விதிகள்:

விளையாட்டு வீரர்கள் தங்கள் விளையாட்டு முறைகளை மாற்றிக் கொள்ள வேண்டும். ஒருவர் விதைகளைப் பிடித்துக் கொள்ள, மற்றொருவர் கணிக்க வேண்டும்.

கணிப்பு சரியாக இருந்தால், கணித்தவர் விதைகளை வெல்வார்; தவறாக இருந்தால், விதைகளைப் பிடித்திருப்பவரே வைத்துக்கொள்வார்.

கணிப்பதற்கு முன் விதைகளை எட்டிப் பார்க்க விளையாட்டு வீரர்களுக்குக் கண்டிப்பான தடை விதிக்கப்பட்டுள்ளது.

விளையாடுவது எப்படி?

இரண்டு விளையாட்டு வீரர்கள் புளியங்கொட்டைகளைச் சரிசமமாகப் பிரித்துக் கொள்ள வேண்டும். முதல் விளையாட்டு வீரர் தன் கைப்பிடி நிறைய புளியங்கொட்டைகளை மறைமுகமாக அள்ளியெடுப்பார். தன் இரண்டு உள்ளங்கைகளுக்கும் நடுவே வைத்து, இரண்டாவது விளையாடும் வீரருக்கு எண்ணிக்கை தெரியாதவாறு நன்றாகக் குலுக்குவார். பின்னர், ஒரு கையை மட்டும் இறுக்கமாக மூடி, இரண்டாவது விளையாட்டு வீரர் முன்பாக நீட்டுவார்.

பின்னர், 'ஒத்தையா அல்லது இரட்டையா?' என எதிரில் இருக்கும் வீரரிடம் கேட்க வேண்டும். இரண்டாவது விளையாடும் வீரர் மூடப்பட்டிருக்கும் அந்தக் கைக்குள் இருக்கும் புளியங்கொட்டைகளின் மொத்த எண்ணிக்கை ஒத்தையா (1, 3, 5, 7... போன்ற ஒற்றைப்படை எண்ணா) அல்லது இரட்டையா (2, 4, 6, 8... போன்ற இரட்டைப்படை எண்ணா) என்பதைத் தன் யூகத்தின் அடிப்படையில் சரியாகக் கணிக்க வேண்டும்.

இரண்டாவது விளையாடும் வீரர் கணித்த பிறகு, முதல் விளையாடும் வீரர் மெதுவாகத் தன் கையைத் திறப்பார். அனைவரும் பார்க்கும்படி விதைகளைக் கீழே வைத்து, ஒவ்வொன்றாக எண்ணிக் காட்டுவார். எண்ணிக்கை இரண்டாவது விளையாட்டு வீரர் சொன்னது போல் சரியாக இருந்தால் (ஒத்தை அல்லது இரட்டை), அந்தப் புளியங்கொட்டைகள் அனைத்தும் இரண்டாவது விளையாட்டு வீரரருக்கே சேரும். ஒருவேளை கணிப்பு தவறினால், இரண்டாவது விளையாடும் வீரர் அந்த எண்ணிக்கைக்கு இணையான புளியங்கொட்டைகளை முதல் விளையாட்டு வீரருக்குக் கொடுக்க வேண்டும்.

வெற்றி பெறுவது எப்படி?

ஆட்டத்தின் முடிவில் அதிக புளியங்கொட்டைகளைச் சேகரிக்கும் விளையாட்டு வீரர் வெற்றியாளர் ஆவார்.

நன்மைகள்

மனக்கணக்கு: விரைவாக எண்ணும் திறனையும் ஒற்றை மற்றும் இரட்டை எண்களைப் பற்றிய புரிதலையும் மேம்படுத்துகிறது.

கவனிப்புத் திறன்: பார்வையால் அளவு மற்றும் கொள்ளளவைக் கணிக்கும் திறனை வளர்க்கிறது.

கவனம்: இரண்டாவது ஆட்டக்காரர் அசைவுகளைக் கவனிக்க முயற்சிப்பதால் கவனிப்புத் திறன் மற்றும் கவனம் அதிகரிக்கிறது.

சுற்றுச்சூழல் நட்பு: சுற்றுச்சூழலில் கிடைக்கும் 100% இயற்கை மற்றும் மட்கும் பொருள்களைப் பயன்படுத்துகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments