இனிப்புப் பிரியர்கள்..!
அமெரிக்கர்கள் சாக்கெட்டை விரும்பி சாப்பிடுவார்கள். கோகோ, பால் கலந்து சாக்கெட்டுகள் மீது அவர்களுக்கு அலாதி பிரியம்.
அமெரிக்கர்கள் சாக்கெட்டை விரும்பி சாப்பிடுவார்கள். கோகோ, பால் கலந்து சாக்கெட்டுகள் மீது அவர்களுக்கு அலாதி பிரியம்.
அரபு நாட்டைச் சேர்ந்தவர்கள் கடித்துத் தின்னும் இனிப்பு மிட்டாய்களை அதிகம் விரும்பி சாப்பிடுகின்றனர்.
தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவர்கள் கைப்பிடியுடன் வாயில் வைத்து, சுவைத்து சாப்பிடும் 'லாலிபாப்' வகை மிட்டாய்களை ரசித்து சாப்பிடுவார்கள்.
Advertisement
Advertisement
பிரெஞ்சுகாரர்களும் இத்தாலிக்காரர்களும் மது கலந்த சாக்லெட்டுகளை ருசிப்பர்.
ஜெர்மானியர்கள் வாயில் போட்டால் கரையாமல் நீண்ட நேரம் சுவைக்கக் கூடிய சாக்லெட், மிட்டாய்களை ரசித்துச் சாப்பிடுவார்கள்.
மேற்காணும் அனைத்து வகை சாக்லெட்டுகளும் மிட்டாய்களும் ரகம் வாரியாக, லண்டனில் தயாரிக்கப்பட்டு பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. மிட்டாய்கள் ஏற்றுமதியில் முதலிடம் வகிக்கும் நாடு இங்கிலாந்து.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.