FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

சின்னதிரை

விஜய் டி.வி.யில் 2017-ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு உலகளவில் ரசிகர்கள் உண்டு. இந்த நிகழ்ச்சிக்கு இது பத்தாவது ஆண்டு.

1 ஆகஸ்ட் 2026, 10:09 pm IST
பகிர்:

விஜய் டி.வி.யில் 2017-ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு உலகளவில் ரசிகர்கள் உண்டு. இந்த நிகழ்ச்சிக்கு இது பத்தாவது ஆண்டு.

முதல் மூன்று சீசன்கள் ஜூன் மாதம் தொடங்கி, செப்டம்பரில் நிறைவடைந்து வந்தன. நான்காவது சீசன், அதாவது கரோனா நேரத்தில் ஒளிபரப்பு தாமதமாகி அக்டோபர் முதல் ஒளிபரப்பு தொடங்கியது.

அப்போது முதல் சென்ற ஆண்டு வரை அக்டோபர் முதல் வாரத்திலிருந்துதான் ஒளிபரப்பு தொடங்கி வந்தது. மறு வருடம் பொங்கல் பண்டிகையுடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது. இந்நிலையில், இந்தாண்டு இதில் மாற்றத்தைச் செய்திருக்கிறார்கள்.அதாவது நிகழ்ச்சி தொடங்கும் வருடத்துக்குள்ளாகவே முடிக்கவிருக்கிறார்கள். அதன்படி இந்தாண்டு நிகழ்ச்சி தொடங்கும் தேதி தெரிய வந்துள்ளது.

Advertisement

Advertisement

செப்டம்பர் மாதம் 6-ஆம் தேதி முதல் பிக் பாஸ் தமிழ் சீசன் 10 ஒளிபரப்பாகவிருக்கிறது. அதிலிருந்து 105 நாள்கள் ஒளிபரப்பாக உள்ளது. இந்த வருடமும் நிகழ்ச்சியை விஜய் சேதுபதியே தொகுத்து வழங்குகிறார். போட்டியாளர்களைத் தேடும் படலம் தொடங்கி விட்டது. டி.வி., சினிமா, மாடலிங் எனப் பல துறைகளிலும் இருக்கும் பலரிடமும் பேசி வருகிறார்களாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments