ராசி அழகப்பனின் 'ஆண்ட'
மதர் ஆர்ட்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் முதல் தயாரிப்பான 'வண்ணத்துப்பூச்சி' திரைப்படம், சிறுவர்களுக்கான படமாக உருவாகிப் பாராட்டுகளைப் பெற்றது.
மதர் ஆர்ட்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் முதல் தயாரிப்பான 'வண்ணத்துப்பூச்சி' திரைப்படம், சிறுவர்களுக்கான படமாக உருவாகிப் பாராட்டுகளைப் பெற்றது. இப்படத்துக்கு தமிழக அரசின் சிறந்த குடும்ப நெறிமுறைகளை வலியுறுத்திய படம் என்ற விருது வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து எழுத்தாளர் இயக்குநர் ராசி அழகப்பன் எழுதிய 'சைக்கிள்' என்ற சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு 'குரங்கு பெடல்' திரைப்படம் உருவாக்கப்பட்டது. இந்நிலையில் மதர் ஆர்ட்ஸ் இன்டர்நேஷனல் தனது அடுத்த படைப்பாக 'ஆண்ட' திரைப்படத்தை உருவாக்கி வருகிறது. இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் மற்றும் தயாரிப்பு ஆகிய அனைத்துப் பொறுப்புகளையும் ராசி அழகப்பன் ஏற்றுள்ளார்.
ஜென்சி தலைமுறையின் பார்வையில் தொடங்கி, 1980-களின் வாழ்க்கைச் சூழலை உயிர்ப்புடன் கண்முன் கொண்டு வந்து நிறுத்தும் ஒரு வாழ்க்கைக் கதையாக 'ஆண்ட' உருவாகிறது. இதில் இடம்பெறும் தட்சிணாமூர்த்தி என்ற கதாபாத்திரத்தின் முழுமையான வாழ்க்கைப் பயணமே கதையின் மையமாக அமைகிறது.
Advertisement
Advertisement
வானத்தை நோக்கி கனவுகளைக் கண்ட ஒரு மனிதன், மண்ணோடு இணைந்து வாழ்ந்த வாழ்க்கை, அவர் சந்தித்த சவால்கள், உறவுகள், சமூகப் பொறுப்பு, மனிதநேயம் மற்றும் வாழ்வியல் நெறிகள் ஆகியவற்றை ஆழமான உணர்வுகளுடன் பதிவு செய்யும் படைப்பாக இந்தத் திரைப்படம் உருவாகி வருகிறது. காலம் மாறினாலும் மனித மதிப்புகள் மாறக்கூடாது என்ற கருத்தை வலியுறுத்தும் வகையில் கதை அமைந்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.