முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

கதாநாயகர்களின் லைன் அப்!

ஆர்யா, விஜய்சேதுபதி, ராகவா லாரன்ஸ் ஆகியோரின் அடுத்தடுத்த லைன் அப்களை இங்கே பார்க்கலாம்....

Updated On : 24 மே 2026, 4:10 am IST
பகிர்:

ஆர்யா, விஜய்சேதுபதி, ராகவா லாரன்ஸ் ஆகியோரின் அடுத்தடுத்த லைன் அப்களை இங்கே பார்க்கலாம்....

அசத்தும் ஆர்யா!

ஆர்யா நடித்திருக்கும் 'மிஸ்டர் எக்ஸ்' திரைப்படம் ஏப்ரல் 17-ஆம் தேதி திரைக்கு வந்துள்ளது. த்ரில்லர் படமாக உருவாகியிருக்கும் இப்படத்தை 'எஃப்.ஐ.ஆர்.' படத்தின் இயக்குநர் மனு ஆனந்த் இயக்கியிருக்கிறார். கௌதம் ராம் கார்த்தி, மஞ்சு வாரியர் என எக்கச்சக்க நட்சத்திரப் பட்டாளங்களையும் கொண்டிருக்கிறது இப்படம்.

Advertisement

Advertisement

இப்படத்தைத் தொடர்ந்து, 'வேட்டுவம்', 'சார்பட்டா 2' என அதிரடியான லைன் அப்களையும் கைவசம் வைத்திருக்கிறார் ஆர்யா.

'மிஸ்டர் எக்ஸ்' படத்தின் வெளியீட்டைத் தொடர்ந்து ஆர்யாவின் அடுத்ததாக 'ஆனந்தன்காடு' படத்தைத் கொண்டு வர திட்டமிடப்படுகிறது. ஆக்ஷன், த்ரில்லர் ஜானரில் தமிழ் -மலையாள மொழிகளில் படமாகவும் இது உருவாகி வருகிறது.

இதன் பிறகு, ஆர்யாவின் 40-ஆவது படத்தை மலையாளத்தில் வெளிவந்த 'ப்ரணயவிலாசம்' படத்தை இயக்கிய நிகில் முரளி இயக்குகிறார். இப்படத்தில் நிகிலா விமல், வைஷ்ணவி சைதன்யா என இரண்டு கதாநாயகிகள் நடிக்கிறார்கள். நீண்ட நாள்களுக்குப் பிறகு, இப்படத்தின் மூலம் காதல் கதை பக்கம் வருகிறார் ஆர்யா. சமகால இளைஞர்களைக் கவரக்கூடிய வகையில் இந்த படம் எழுதப்பட்டிருக்கிறதாம்.

'மதராசபட்டினம்', 'ராஜா ராணி', 'காதர் பாட்ஷா என்கிற

முத்துராமலிங்கம்' படங்களைத் தொடர்ந்து ஆர்யாவின் இந்தப் படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். இதனை தொடர்ந்து, தற்போது பா.ரஞ்சித் இயக்கி வரும் 'வேட்டுவம்' படத்தில் நடித்து வருகிறார், ஆர்யா.

இயக்குநர் ரஞ்சித், புதியதொரு கதைக்களத்தை இந்தப் படத்தில் உருவாக்கியிருக்கிறாராம். இதுவும் 'மல்லர்கம்பம்' பற்றிய ஒரு ஸ்போர்ட்ஸ் திரைப்படம் தானாம். இதனையடுத்து, ஜூன் மாதத்திலிருந்து ஆர்யாவை வைத்து ரஞ்சித் இயக்கும் 'சார்பட்டா 2' படத்தின் வேலைகளும் தொடங்கவிருக்கின்றன.

மணிரத்னம், மகிழ்திருமேனி, வெற்றிமாறன் தேர்வில் விஜய்சேதுபதி!

'மகாராஜா'வில் கிடைத்த பெரும் வெற்றியைத் தொடர்ந்து மிகவும் தேர்ந்த படங்களைத் தேர்ந்தெடுத்துச் செய்கிறார் விஜய்சேதுபதி. தமிழ் நடிகர்களில் கையில் அதிகப்படியான படங்களை கையிருப்பில் வைத்திருப்பதும் அவர்தான். திரையரங்கைத் தாண்டி அவர் நடித்திருக்கும் 'காட்டான்' சீரிஸூம் ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகி, வரவேற்பைப் பெற்றுள்ளது.

விஜய் சேதுபதி நடித்த 'ட்ரெயின்' இப்போது வெளியீட்டுக்குக் காத்திருக்கிறது. கோடை விடுமுறைக்குள் 'ட்ரெயின்' வெளியாகி விடும். முற்றிலும் புதிய விதத்தில் முழுக்க ஒரு ரெயில் பயணத்தில் நடக்கும் கதையாக புதுமையாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

'ஸ்லம்டாக்' படம் தெலுங்கு இயக்குநர் பூரி ஜெகநாத் இயக்கத்தில் ரெடியாகிவிட்டது. ஆந்திரா, மும்பை போன்ற இடங்களில் இதன் படப்பிடிப்பு நடைபெற்றது. ஆக்ஷன், எமோஷன் கலந்த படம் என எதிர்பார்க்கப்படுகிறது. பெரும் பொருள்செலவில் இந்தப் படம் தயாராகியிருக்கிறது. சத்தமே இல்லாமல் 'சீதக்காதி'க்குப் பிறகு இயக்குநர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் ஒரு படத்தையும் விஜய் சேதுபதி நடித்து முடித்துவிட்டார். ஒரே மூச்சில் படத்தை நடித்துக் கொடுத்து விட்டார் சேதுபதி.

'ஜெயிலர் 2' படத்தில் ஒரே ஒரு நாள் நடித்தாலும், திருப்பம் தரக்கூடிய ஒரு வேடத்தில் சேதுபதி நடித்திருக்கிறார். அவரின் படப்பிடிப்பு முடிந்து விட்டது. 'பாக்கெட் நாவல்' தொடர்ந்து படப்பிடிப்பு நடந்து வருகிறது. சேதுபதிக்கு மிகவும் நெருக்கமான, பிடித்தமான இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா. படப்

பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அவருடையது மிகவும் வித்தியாசஹமான கேரக்டர் என்று தெரிகிறது.

சிம்பு நடிக்கும் 'அரசன்' படத்திலும் முக்கியப் பங்கு ஏற்றிருக்கிறார் சேதுபதி. வெற்றிமாறனின் வேண்டுகோளுக்கு இணங்கவும், தயாரிப்பாளர் தாணுவின் அன்புக்காகவும் நடிக்கிற படமாக 'அரசன்' அமைகிறது. இவற்றின் படப்பிடிப்பு முடிந்த பிறகு மணிரத்னம் இயக்கும் படம் ஆரம்பமாகிறது. அதற்கான கதை விவாதங்களில், சற்று ஓய்வாக இருக்கும் போது கலந்து கொள்கிறார் சேதுபதி. இந்தப் படமும் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு உள்ளாகியிருக்கிறது.

'மகாராஜா 2' ஸ்கிரிப்ட்டை முடித்துவிட்டார் டைரக்டர் நித்திலன். சேதுபதிக்கும் அதன் கதை சொல்லப்பட்டு, அவர் ஓகே சொல்லிவிட்டார். மணிரத்னம், வெற்றிமாறன் படங்களுக்கு ஈடாக இந்தப் படத்துக்கும் எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது. இதற்கிடையில் இயக்குநர் மகிழ்திருமேனியும் கதை சொல்லி, அதுவும் தயாரிப்புக்குப் போகப்போகிறது. மணிரத்னம் படம் முடிந்த பிறகு இவற்றின் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என்று தெரிகிறது.

புல்லட் வேகத்தில் லாரன்ஸ்!

ராகவா லாரன்ஸின் 'காஞ்சனா 4' படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்றது வருகிறது. 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' படத்துக்குப் பின், 'பென்ஸ்', 'புல்லட்', 'கால பைரவா' எனப் பல படங்கள் கைவசம் வைத்துள்ளார். இதில் அவர் இயக்கி நடித்து வரும் 'காஞ்சனா' வின் நான்காம் பாகத்தின் படப்பிடிப்பு மூன்றாவது ஷெட்யூலை நோக்கி முன்னேறியுள்ளது.

'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' படத்தை முடித்துவிட்டு லோகேஷ் கனகராஜின் தயாரிப்பில் 'பென்ஸ்' படத்தில் நடிக்க ரெடியானார்.

சில காரணங்களால், அதன் படப்பிடிப்பு வேகம் எடுக்கவில்லை. இதனால் அதன் தேதிகளை 'புல்லட்' படத்துக்குக் கொடுத்தார் லாரன்ஸ். அவரது தம்பி எல்வின் நாயகனாக அறிமுகமாகும் இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் இன்னாசி பாண்டியன் இயக்கியுள்ளார். 'புல்லட்' படத்தை முடித்துக் கொடுத்துவிட்டு 'காஞ்சனா 4' படத்தை ஆரம்பித்தார் லாரன்ஸ்.

'பேய் ட்ரெண்டை உருவாக்கணும்னு நான் எதுவும் பண்ணலை. எனக்கு குழந்தை ரசிகர்கள் அதிகம்கிறதால, பேயை டிரெண்ட் ஆக்கிட்டாங்க. தவிர எங்க டீமோட சின்ஸியரான வொர்க் ஒரு ட்ரெண்டை உருவாக்கிருச்சு' எனச் சொல்லும் லாரன்ஸின் 'காஞ்சனா' வில் பூஜா ஹெக்டே கதாநாயகி. இன்னொரு கதாநாயகியாக நோரா பதேஹி நடிக்கிறார். தவிர 'காஞ்சனா'க்குப் பலம் சேர்க்கும் கோவை சரளா, தேவதர்ஷினி கூட்டணி இதிலும் தொடர்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.