திரைக் கதிர்
அபிஷன் ஜீவிந்துக்கும் அவருடைய நீண்ட நாள் காதலியான அகிலா என்பவருக்கும் கடந்தாண்டு அக்டோபர் மாதம் திருமணம் நடைபெற்றிருந்தது.
அபிஷன் ஜீவிந்துக்கும் அவருடைய நீண்ட நாள் காதலியான அகிலா என்பவருக்கும் கடந்தாண்டு அக்டோபர் மாதம் திருமணம் நடைபெற்றிருந்தது. 'டூரிஸ்ட் ஃபேமிலி' படத்தின் புரோமோஷன் நிகழ்வில், அபிஷன், அகிலாவுக்கு ப்ரொபோஸ் செய்திருந்த விடியோ வைரலானது பலருக்கும் நினைவிருக்கலாம்.
இந்தத் தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது. இத்தகவலை அபிஷன் ஜீவிந்த் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். திரைத்துறையினர் பலரும் அபிஷன் ஜீவிந்துக்கு தங்களின் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.
Advertisement
Advertisement
சூர்யாவின் 'சீன்' திரைப்படம் தீபாவளி வெளியீடாகத் திரைக்கு வந்துள்ளது. மலையாள இயக்குநர் ஜித்து மாதவன் எழுதி இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் நஸ்ரியா, நஸ்லென் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். இதன் புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார் நஸ்ரியா.
இந்த நிகழ்வில் பேசிய நஸ்ரியா, 'சென்னைக்கு வர எனக்கு எப்போதும் பிடிக்கும். நான் தமிழ்ப் படங்கள் செய்யாத நாள்களிலும், தமிழ் மக்கள் எனக்குக் கொடுத்த அந்த அன்பும், காதலும், ஆதரவும் எப்போதும் குறைந்ததே இல்லை. 'சீன்' திரைப்படத்தைத் தங்களின் முதல் தயாரிப்பாகத் தேர்ந்தெடுத்த 'ழகரம்' நிறுவனத்துக்கு நன்றி. இயக்குநர் ஜித்து மாதவன், எனக்கு 'மாயா' என்ற கதாபாத்திரத்தைக் கொடுத்ததற்கு மிகப்பெரிய நன்றி!' எனத் தெரிவித்துள்ளார்.
நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், யஷ், சாய் பல்லவி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'ராமாயணா'. இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் - ஹான்ஸ் ஜிம்மர் ஆகியோர் இசையமைத்திருக்கின்றனர். இந்தப் படத்தின் சிறப்புத் திரையிடல் நிகழ்ச்சி அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சலஸில் நடைபெற்றது. இதில்இராவணன் குறித்து நடிகை சாய் பல்லவி பேசியிருக்கிறார். அவரது இந்தப் பேச்சுக்குச் சிஜ்லர் ஆதரவாகவும் சிலர் எதிராகவும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
இராவணன் குறித்துப் பேசிய சாய் பல்லவி, 'இராவணன் அவ்வளவு கெட்டவர் கிடையாது. நம் ஒவ்வொருவருக்குள்ளும் ஓர் இராவணன் இருக்கிறான். அவனை சரியாகக் கண்டறிந்து நாம் நம்மை மாற்றிக்கொள்ள வேண்டும். அதாவது தீய குணங்களை நாம் கண்டறிந்து, காலப்போக்கில் நம்மை நாமே மாற்றிக்கொள்வது மிகவும் முக்கியம்' என்று பேசியிருக்கிறார்.