நேஹா சர்மா எச்சரிக்கை!
தமது முகத்தைப் பயன்படுத்தி அனுமதியின்றி ஏ.ஐ. மூலம் படங்கள் மற்றும் விடியோக்களை உருவாக்குபவர்களுக்கு நடிகை நேஹா சர்மா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமது முகத்தைப் பயன்படுத்தி அனுமதியின்றி ஏ.ஐ. மூலம் படங்கள் மற்றும் விடியோக்களை உருவாக்குபவர்களுக்கு நடிகை நேஹா சர்மா எச்சரிக்கை விடுத்துள்ளார். அக்டோபர் 17 அன்று தன்னுடைய எக்ஸ் சமூக வலைதளப் பதிவில்,
'எனது முகத்தைப் பயன்படுத்தி என்னைத் தவறாகச் சித்தரிப்பதையும், என்னுடைய நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்துவதையும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. எனது முகத்தையோ, என்னை அடையாளப்படுத்தும் தோற்றத்தையோ பயன்படுத்துவதற்கு நான் அனுமதி அளிக்கவில்லை.
இத்தகைய படங்கள் மற்றும் விடியோக்களை உருவாக்குபவர்கள், பதிவிடுபவர்கள், பரப்புபவர்கள் எனப் பொறுப்பான ஒவ்வொருவர் மீதும் சட்ட நடவடிக்கை எடுப்பேன். போலி சமூக வலைதளக் கணக்குகளுக்குப் பின்னால் மறைந்துகொள்வதாலோ, ஏ.ஐ. தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதாலோ பொறுப்பிலிருந்து தப்ப முடியாது.
Advertisement
Advertisement
ஏற்கெனவே பதிவிடப்பட்டுள்ள அத்தகைய உள்ளடக்கங்களை உடனடியாக நீக்க வேண்டும். இனிமேல் அவற்றை உருவாக்கவோ, திருத்தவோ, பகிரவோ கூடாது. உங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுவிட்டது'' என்று குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.