விலங்குகளைப் போற்றும் தமிழர் மரபு
நாம் ஒவ்வோராண்டும் ஜனவரித் திங்களில் தேசிய அளவில் விலங்குகள் நல இருவார விழா கொண்டாடி விலங்குகளைப் பாதுகாக்க வேண்டிய அவசியத்தை மக்களுக்கு உணர்த்தி வருகிறோம்.
நாம் ஒவ்வோராண்டும் ஜனவரித் திங்களில் தேசிய அளவில் விலங்குகள் நல இருவார விழா கொண்டாடி விலங்குகளைப் பாதுகாக்க வேண்டிய அவசியத்தை மக்களுக்கு உணர்த்தி வருகிறோம். நம் முன்னோர் சங்கக் காலத்திலேயே விலங்குகளைப் போற்றியதுடன் அவற்றைத் தம் வழித்தோன்றல் வரிசையில் வைத்துப் போற்றினர் என்பதை இலக்கியங்களில் காணமுடிகிறது.
குமணனின் வள்ளல் தன்மையைப் பாடும் பெருஞ்சித்திரனார் புறநானூற்றுப் பாடலில் காரியையும் ஓரியையும் வைத்துப் பாடுங்கால், மலையமான் திருமுடிக்காரி தன் குதிரைக்குத் தன் பெயரை வைத்திருந்தான் என்பதை,
காரி யூர்ந்து பேரமர்க் கடந்த
Advertisement
Advertisement
மாரி யீகை மறப்போர் மலையனும்
ஊரா தேந்திய குதிரைக் கூர்வேல்
(புறம், 1586--7)
எனப் பாடியுள்ளார். ஓரி எனும் வள்ளலும் தனது குதிரைக்குத் தன் பெயரைச் சூட்டியிருந்தான் என்பதை நல்லூர் நத்தத்தனார் குறிப்பிட்டுள்ளார். ஏழு வள்ளல்களின் சிறப்புகளைப் பாடிய புலவர், காரியையும் ஓரியையும் பாடும் வேளையில்,
காரிக் குதிரைக் காரியொடு மலைந்த
ஓரிக் குதிரை ஓரியும் என ஆங்கு
(சிறுபா.110-111)
என்று குறிப்பிடுகிறார். காரியைப் போலவே ஓரியும் தனது குதிரையைத் தன் வழித்தோன்றலாகவே நினைந்துப் போற்றினான் என்பதும் தெரிகிறது. அன்று தமிழர்கள் கடைப்பிடித்ததையே இன்று நமது இந்திய அரசு தேசிய அளவில் விலங்குகள் நல இருவார விழாவாகப் போற்றுகிறது. சங்கத் தமிழர் மரபை நாமும் பின்பற்றுவோம்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.