பெரும்புலியூர் சுந்தரராஜப் பெருமாள் கோயில்!
திருவையாறு சப்தஸ்தான தலங்களுள் ஒன்றான தில்லை ஸ்தானத்திற்கு அருகில் உள்ளது பெரும்புலியூர்.
திருவையாறு சப்தஸ்தான தலங்களுள் ஒன்றான தில்லை ஸ்தானத்திற்கு அருகில் உள்ளது பெரும்புலியூர். தல வரலாற்றின்படி, வியாக்ரபாத முனிவர் தவம் செய்த இடமாகும். அம்முனிவரின் வேண்டுகோளின்படி, முனிவர்கள், யோகிகள், தேவர்கள் முதலானோர் யாகம் செய்ய தகுந்த இடத்தை தேர்வு செய்யும் பொருட்டு திருமால் தன் சுதர்சன சக்கரத்தைச் சுழற்றிவிட, ஸ்ரீசுதர்சனம் காவிரிக்கும், கொள்ளிடத்திற்கும் இடையில் தில்லை ஸ்தானம் அருகில் நிலைகொண்டதாம். இதன் அடையாளமாக ஸ்ரீ சக்கரத்தாழ்வார் எழுந்தருளியிருப்பதைக் காணலாம்.
ஸ்ரீசுதர்சன ஆழ்வாரின் அம்சமாக அவதரித்தவர் திருமழிசை ஆழ்வார் என்ற கூற்றும் உண்டு. எம் பெருமான், சுந்தரராஜப் பெருமாள் என்ற திருநாமத்துடன் எழுந்தருளியுள்ளார். தாயார் திருநாமம் சுந்தரவல்லி! பெரும்புலியூர் அழகனைக்காண வந்த ஆழ்வாரின் திருமேனியில், பாற்கடலில் பாம்பணைமீது எழுந்தருளியுள்ள தன் திருக்கோலத்தைக் காட்டி உலகோருக்கு ஆழ்வாரின் பெருமையை உணரச்செய்தான் பரந்தாமன். உத்ராயண புண்ணிய காலத்தில் ஒரு நாளும், தட்சிணாயண புண்ணிய காலத்தில் ஒரு நாளும் இத்தல மூலவரின் திருவடிகளில் கதிரவன் தன் கிரணங்களால் வழிபாடு செய்வது இன்றளவும் நடைபெற்று வருகிறது.
இவ்வாலயத்தில் ராஜகோபுரம், பெருமாள், தாயார், விமானம், ஆழ்வார் சந்நிதி, நாகர், நரசிம்மர், கருடன், சக்கரத்தாழ்வார் மற்றும் ஆஞ்சநேயர் சந்நிதிகளில் திருப்பணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. சம்ரோக்ஷண வைபவம் ஜுன் 2 ஆம் தேதி நடைபெறுகின்றது.
Advertisement
Advertisement
தொடர்புக்கு: 94435 86453.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.