அருவாப்பாடி சிவன்கோயில்!
ஒன்பது கோளில், சனீஸ்வரன் கையில் வில்லும் அம்பும் கொண்டு காட்சி தருகிறார். மிக சிறப்பான காட்சி சிறு கிராமத்தில் உள்ளதால் பிரபலம் ஆகவில்லை.
மணல்மேடு-வில்லியனல்லூர் -மயிலாடுதுறை சாலையில் கொண்டல் பாலம் தாண்டி அருவாப்பாடி சாலை பிரிகிறது. அதில் இரண்டு கி.மீ. தூரம் சென்றால் அருவாப்பாடி ஊரை அடையலாம். சிறிய ஊர் மையத்தில் சிவன், மாரியம்மன் கோயிலும் இணைந்தே உள்ளன.
இங்கு ஒன்பது கோளில், சனீஸ்வரன் கையில் வில்லும் அம்பும் கொண்டு காட்சி தருகிறார். மிக சிறப்பான காட்சி சிறு கிராமத்தில் உள்ளதால் பிரபலம் ஆகவில்லை.
மொரட்டாண்டி, வழுவூர் போன்ற தலங்களிலும் இவ்வாறு காட்சி அளிக்கிறார். சோழ மன்னன் ஒருவர் இப்பகுதியை அரசாண்டபோது சனிபகவானின் சஞ்சாரம் காரணமாக, நாட்டில் கடும் பஞ்சம் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டது. அந்த மன்னன் சனி பகவானை நோக்கித் தவமிருந்து நாட்டில் பஞ்சம் வராத வரத்தைப் பெற்றார். அவர் வழிபட்ட சனி பகவான், மேகத்தைத் துளைத்து மழை பொழிய வைத்தாராம். அதை நிரூபிக்கும் வகையில் அவர் கையில் வில்லுடன் அற்புதமாகக் காட்சி தருகிறார்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.