முகப்பு
வெள்ளிமணி

பொன்மொழிகள்!

பகவானின் லீலைகள் ஆகிய செயல்களையே இடைவிடாமல் நினைத்து, ஆடிப்பாடி ""அரங்கனே!'' என்று, அவன் திருநாமங்களைச் சொல்லிக் கூப்பிடும் தொண்டர்கள் இருக்கிறார்கள்.

Updated On : 31 ஜூலை 2020, 12:00 am IST
பகிர்:


பகவானின் லீலைகள் ஆகிய செயல்களையே இடைவிடாமல் நினைத்து, ஆடிப்பாடி ""அரங்கனே!'' என்று, அவன் திருநாமங்களைச் சொல்லிக் கூப்பிடும் தொண்டர்கள் இருக்கிறார்கள். அவர்களின் திருவடித்துகள்களில் நாம் ஆடப் பெற்றால் பின்பு கங்கையாற்றில் நீர் குடைந்து ஆடும் ஆசைதான் எதற்கு?

-ஸ்ரீ குலசேகராழ்வார், திருமொழி2.2

கங்கை போன்ற புனித நதிகளில் மனிதனின் பாவங்கள் கரைந்து போகின்றன. அதுபோலவே, இறைவன் மீது பக்தியைக் கையாள்பவன் எல்லாப் பாவங்களிலிருந்தும் விடுபடுகிறான்.

Advertisement

Advertisement

-மகான் ஞானதேவர்

திருமாலின் திருநாமங்களைச் சொல்வதுதான் எல்லா வேதங்களின் சாரமாகும். ஆதலால் எம்பெருமானின் திருநாமங்களால், அவனைத் துதிக்கும் வகையைத் தெரிந்துகொள்ளுங்கள்.

-ஸ்ரீபூதத்தாழ்வார்,
இரண்டாம் திருவந்தாதி 39

நாம் ஒரு செயலை உற்சாகத்துடன் தொடங்கிச் செய்யும்பொழுது கவலைக்கு இடம் கொடுக்கக் கூடாது. அவ்விதம் செய்யாவிட்டால் அது நம்மை மேற்கொண்டு நமது முயற்சிகளைச் செய்யவிடாமல் அழித்துவிடும்.

-ராமாயணம்

ஏழை எளியவர்களுக்குத் தன்னால் இயன்றதைக் கொடுக்காமல் மறைத்து வைக்கக் கூடாது.

-ஒளவையார்

 படிக்கத் தெரியாதவனுக்குப் புத்தகத்தைக் கொடுப்பதும், ஆத்மவித்தை கற்பதில் சிரத்தை இல்லாதவனுக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பதும் வீண் செயலாகும்.

-இந்து தர்மம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments