பொன்மொழிகள்!
சித்தத்தின் மீது வெற்றி கொள்வதற்கு உறுதியான உபாயங்கள் நான்கு இருக்கின்றன.
சித்தத்தின் மீது வெற்றி கொள்வதற்கு உறுதியான உபாயங்கள் நான்கு இருக்கின்றன. அவை 1. ஆன்மிக தத்துவ நூல்களை ஓதுவது, 2. நல்லோர் பெரியோர்களின் சத்சங்கம், 3.வாசனைகளை (சம்ஸ்காரங்களை) ஒழித்தல், 4. பிராணாயாமம் செய்தல் ஆகியவையாகும்.
-யோகவாசிஷ்டம்
இறந்த பிறகு புண்ணியவான்கள் ஒளி உலகத்திற்கும், பாவிகள் இருள் உலகத்திற்கும் செல்வார்கள்.
-ஸ்ரீ அருணகிரிநாதர்
நம்மிடம் அருள் என்னும் மேலான உணர்வு இருக்க வேண்டும். அது இல்லாதபோது உள்ளத்தில் அறிவு சுடர் விடாது. நாம் அந்த அருளுணர்வின் மூலம்தான் ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலங்களையும் வெல்ல முடியும்.
- ஒளவையார்
Advertisement
Advertisement
பாழாய்ப்போன இந்த உலக மாயையை விட்டு மனம் தனித்து நிற்பது எப்பொழுது? மனமானது செம்மையாகத் திகழ்வதுதான் எப்பொழுது?
-சட்டைமுனி சித்தர்
வாழ்க்கையை ஒரு கர்ம யோகமாக வாழ்வதற்கு முயற்சி செய்ய வேண்டும். அந்த ஆன்மிக முயற்சி ஒருபோதும் வீண்போகாது. அந்த முயற்சியில் குற்றம் கிடையாது. சிறிதளவு முயற்சிகூட பெரும் பயத்திலிருந்து ஒருவனைக் காப்பாற்றுகிறது.
-பகவத்கீதை 2.40
பிரம்மத்தைத் தவிர குரு வேறானவர் அல்லர். இது இரண்டு முறையும் சத்தியம்.
-குரு கீதை 1.10
உலகமே ஆத்மாவால் வழி நடத்தப்படுகிறது. ஆத்மாவே அனைத்திற்கும் ஆதாரம். பேருணர்வுப் பொருளான அந்த ஆத்மாவே இறைவன்.
-ஐதரேய உபநிஷதம் 3.3
"இந்த உலகத்தைப் படைத்த இறைவன் ஒருவனே' என்பதை அறிந்து அவனை வணங்க வேண்டும். எந்த விதமான தீய செயல்களையும் செய்யாமல் உத்தமனாக இந்தப் பூமியில் வாழ வேண்டும்.
-கும்பமுனி (அகத்தியர்) சித்தர்
பாத்திரத்தில் ஒரு சிறிய துவாரமிருந்தாலும், அதிலிருந்து எல்லா நீரும் வெளியேறி விடுகிறது. இதுபோலவே ஆத்ம சாதகனின் மனதில் தீய ஆசைகள் ஏற்பட்டால், சாதனையின் பயன் மறைந்துவிடுகிறது.
-மகான்களுடைய சீரிய உபதேசம்
உலகியலின் நடுவில் வாழ்கின்ற மூடர்கள் தங்களை "அறிவாளிகள்' என்றும், "பண்டிதர்கள்' என்றும் கருதுகிறார்கள். அவர்கள் மூப்பு, மரணம் ஆகியவற்றின் வசப்பட்டு உழல்கிறார்கள். குருடனால் வழிகாட்டப்பட்ட குருடர்களைப்போல், இவர்கள் மீண்டும் மீண்டும் பிறவிச்சூழலில் உழல்கிறார்கள்.
-முண்டக உபநிஷதம் 1.1.8
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.