இந்த வார நிகழ்வுகள்!
சென்னை சேத்துப்பட்டில் 100-ஆம் ஆண்டு ஆடித் திருவிழா..
100-ஆம் ஆண்டு ஆடித் திருவிழா
சென்னை சேத்துப்பட்டு மெக்நிகல்ஸ் சாலையில் உள்ள அருள்மிகு கருக்காத்தம்மன் கோயிலின் 100}ஆம் ஆண்டு ஆடித் திருவிழா நடைபெற்றுவருகிறது. ஆக. 11}இல் நடைபெறும் நிகழ்ச்சிகள்: காலை 10 நுங்கம்பாக்கம் அருள்மிகு அகத்தீஸ்வரர் கோயிலில் காலை 10 மணிக்கு கருக்காத்தமனுக்கு அபிஷேக, ஆராதனைகள், மாலை 6 ரோஷா நகர் டி.வி. புகழ் மு.மணவாளன் குழுவினரின் நாதஸ்வரக் கச்சேரி} மங்கள இசை, இரவு 7} அம்மனுக்கு சீர்வரிசை, இரவு 9} ஊஞ்சல் உற்சவம், இரவு 10} அம்மன் திருவீதியுலா.
பாலாலய விழா
Advertisement
Advertisement
சென்னை மயிலாப்பூர் சாயிபாபா கோயிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படுவதையொட்டி, பாலாலயம் நடைபெற உள்ளது. ஆக. 29 மாலை 5.30 மணிக்கு சிறப்புப் பூஜைகள், ஆக. 30 காலை 7.30} பாலாலய பூஜை, ஹோமம், பூர்ணாஹுதி, தீபாரதனை, காலை 9} பாலாலய ஸ்தாபனம், தீபாரதனை, பிரசாதம் வழங்குதல்.
பிரீதி வைபவம்
தென்காசி ஆலங்குளம் நெட்டூர் கிராமத்தில் உள்ள தர்மசாஸ்தா ஸ்ரீமாணிக்கமுடையார் கோயிலில் பெரிய அடியேந்திரம் சாஸ்தா பிரீதி வைபவம் ஆக. 10 (சனிக்கிழமை) நடைபெறுகிறது.
தொடர்புக்கு} 99425 36969.
உழவாரப் பணி
சென்னை கே.கே. நகர் அண்ணாமலையார் அறப்பணிக் குழு சார்பில், ஆக. 11}இல் திருத்தணி, நெமிலி மதுரமாத
வபுரம் ராமர் ஆலயத்தில் உழவாரப் பணி.
தொடர்புக்கு} 94440 28429.
திருவிளக்குப் பூஜை
சேலம் அஸ்தம்பட்டி ஸ்ரீபாரதி பார்ட்டி ஹாலில் ஆக. 9}ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு திருவிளக்கு பூஜை.
தொடர்புக்கு} 94421 91793.
கும்பாபிஷேகம்
சென்னை ராயப்பேட்டை புதுப்பேட்டை பி.வி.கோயில் தெருவில் உள்ள அருள்மிகு பிரசன்ன வாராஹி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் ஆகஸ்ட் 23}இல் (வெள்ளிக்கிழமை) காலை 7.30 முதல் 9 மணிக்குள் நடைபெறுகிறது.
வேலூர் மாவட்டம், குடியாத்தம் காமாட்சியம்மன்பேட்டை ஆண்டியப்ப ஆச்சாரி தெருவில் உள்ள அருள்மிகு ஸ்ரீசெல்வவிநாயகர் கோயில் கும்பாபிஷேகம் ஆகஸ்ட் 19}இல் (திங்கள்கிழமை) காலை 9 மணி முதல் 10 மணிக்குள் நடைபெறுகிறது.
திருப்பணிக்கு உதவலாமே...
திருப்பத்தூர் மாவட்டத்துக்கு உள்பட்ட ஆம்பூர் அருள்மிகு பெரிய ஆஞ்சநேயர் கோயில் திருப்பணி நடைபெற்றுவருகிறது. ஸ்ரீ சனீஸ்வரனின் ஆணவத்தை அடங்கிய ஸ்ரீ
அனுமன் இந்தக் கோயிலில் எழுந்தருளியுள்ளது சிறப்பு.
தொடர்புக்கு: 94431 61369
வேலூர் மாவட்டத்துக்கு உள்பட்ட பேர்ணாம்பட்டு அருகேயுள்ள டி.டி.மோட்டூரை அடுத்த பெரிய பள்ளம் என்ற அண்ணா நகரில் உள்ள மகாகாளி கோயிலில் 32 அடி உயர காளியம்மன் சிலை, சிவன் விநாயகர், பைரவர், நவக்கிரகங்கள் உள்ளிட்ட சந்நிதிகள் அமைக்கப்பட்டு, கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
தொடர்புக்கு: 94862 49951.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.