FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வெள்ளிமணி

வார பலன்கள் (மே 29 - ஜூன் 4) 12 ராசிகளுக்கும்!

எப்படி இருக்கப்போகிறது இந்த வாரம்..

Updated On : 29 மே 2026, 1:09 pm IST
ஜோதிடம் - DPS
பகிர்:

தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் இந்த வார (மே 29 - ஜூன் 4) பலன்களைத் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பயன் பெறுங்கள்.

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் எண்ணப்படி நடந்து கொள்வீர்கள். வியாபாரி

களுக்கு புதிய பொருள்கள் விற்பனையில் நன்மை ஏற்படும். விவசாயிகளுக்கு விளைச்சல் நன்றாக இருக்கும்.

Advertisement

Advertisement

அரசியல்வாதிகள் கட்சி மேலிடத்திடம் பொறுமையோடு நடந்துகொள்வீர்கள். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் சிறிய தாமதத்துக்குப் பிறகு கிடைக்கும்.

பெண்கள் கணவருடன் விட்டுக் கொடுத்து நடந்துகொள்வீர்கள். மாணவர்கள் பெற்றோரின் ஆதரவைப் பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம் - மே 30, 31, ஜூன் 1.

ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய) 

குடும்பத்தில் அமைதி நிறையும். வம்பு வழக்குகளில் இருந்து ஒதுங்கி இருப்பீர்கள். வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள்.

உத்தியோகஸ்தருக்கு விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். வியாபாரிகள் கடையை அழகுபடுத்தி வாடிக்கையாளர்களைக் கவர்வீர்கள்.

விவசாயிகள் விவசாய உபகரணங்களை வாங்குவீர்கள். அரசியல்வாதிகள் புதிய தொண்டர்களைப் பெறுவீர்கள். கலைத்துறையினர் துணிந்து செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள்.

பெண்கள் தெய்வ வழிபாட்டில் மனதைச் செலுத்துவீர்கள். மாணவர்கள் சக மாணவர்களின் உதவிகளைப் பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம் - ஜூன் 2, 3.

மிதுனம் (மிருகசீரிஷம் 3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

பொருளாதார நிலைமை நன்றாக இருக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடத்தத் திட்டமிடுவீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளிடம் விவேகத்துடன் நடந்து கொள்வீர்கள். வியாபாரிகள் கொடுக்கல், வாங்கலில் ஏற்றத்தைக் காண்பீர்கள். விவசாயிகள் குத்தகைப் பாக்கிகளை வசூலிப்பீர்கள்.

அரசியல்வாதிகள் கட்சி ரகசியங்களை வெளியில் பேச வேண்டாம். கலைத்துறையினருக்கு தனித்திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.

பெண்கள் குடும்ப கெüரவத்தை மேம்படுத்துவீர்கள். மாணவர்கள் தேக ஆரோக்கியத்தைப் பேணிக் காப்பீர்கள்.

சந்திராஷ்டமம் - ஜூன் 4.

கடகம் (புனர்பூசம் 4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் மறையும். புதிய தொழில்களில் இறங்குவீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் அலுவலக சூழ்நிலைகளை அனுசரித்து நடந்து கொள்வீர்கள். வியாபாரிகள் கூட்டாளிகளின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். விவசாயிகள் தரமான விதைகளை வாங்கிப் பயிரிடுவீர்கள்.

அரசியல்வாதிகள் கட்சியில் தங்கள் பெருமையை நிலைநிறுத்திக் கொள்வீர்கள். கலைத்துறையினருக்கு பண வரவு சிறப்பாக இருக்கும்.

பெண்கள் ஆடை அணிமணிகளை வாங்குவீர்கள். மாணவர்கள் ஆசிரியர்களின் ஆதரவைப் பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

சிம்மம் (மகம், பூரம்,  உத்திரம் முதல் பாதம் முடிய)

தொழிலில் முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். பொருளாதாரம் சீராக இருக்கும். குடும்பத்தினரிடம் அனுசரித்துச் செல்வீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு பணவரவு நன்றாக இருக்கும். வியாபாரிகள் முயற்சிக்கேற்ற லாபத்தைப் பெறுவீர்கள்.

விவசாயிகளுக்கு விளைச்சல் அமோகமாக இருக்கும். அரசியல்வாதிகள் சுறுசுறுப்புடன் செயல்பட்டு கட்சியில் நற்பெயரெடுப்பீர்கள்.

கலைத்துறையினரின் வளர்ச்சிக்கு சக கலைஞர்களே உதவி செய்வார்கள். பெண்களுக்கு கணவருடனான ஒற்றுமை அதிகரிக்கும். மாணவர்கள் கடினமாகப் படித்து படிப்பில் முன்னேறுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

உடல் ஆரோக்கியம், மனவளம் இரண்டும் சிறப்பாக இருக்கும். குடும்பத்துடன் சுற்றுலா சென்று வருவீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் ஊழியர்களுடன் நட்புடன் பழகுவீர்கள். வியாபாரிகள் வியாபாரத்தில் புதிய உத்திகளைப் புகுத்துவீர்கள். விவசாயிகள் பாசன வசதிகளை மேம்படுத்திக் கொள்வீர்கள்.

அரசியல்வாதிகள் உள்கட்சி விவகாரங்களில் தலையிட மாட்டீர்கள். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.

பெண்களுக்கு சமூகப் பணியில் செல்வாக்கு அதிகரிக்கும். மாணவர்கள் விளையாட்டுகளில் வெற்றி பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம் இல்லை.

துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம்

தொழிலில் புதிய வாய்ப்புகள் உண்டாகும். உழைப்புக்கு உண்டான பலன் கிடைக்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு பண வரவு உண்டாகும். வியாபாரிகள் குறைந்த முதலீட்டில் பெரிய லாபத்தைப் பெறுவீர்கள். விவசாயிகள் சக விவசாயிகளிடம் பார்த்துப் பழகவும்.

அரசியல்வாதிகள் எதிர்க்கட்சியினரின் நடவடிக்கைகளை கவனித்து, அதற்கேற்ப செயல்முறைகளை மாற்றிக்கொள்வீர்கள். கலைத்துறையினர் கலைப்பயணங்களை மேற்கொள்வீர்கள்.

பெண்கள் நிதானத்துடன் நடந்து கொள்வீர்கள். மாணவர்களுக்கு நண்பர்களின் ஆலோசனை உதவிகரமாக அமையும்.

சந்திராஷ்டமம் - இல்லை.

விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

பொருளாதாரத்தில் அபிவிருத்தி உண்டாகும். உங்கள் பேச்சுக்கு மதிப்பு அதிகரிக்கும்.

உத்தியோகஸ்தர்கள் அலுவலக வேலைகளைத் திட்டமிட்டுச் செய்வீர்கள். வியாபாரிகளுக்கு கொடுக்கல், வாங்கல் விஷயங்கள் சிறப்பாக இருக்கும். விவசாயிகள் மாற்றுப்பயிர்களைப் பயிரிட்டு லாபமடைவீர்கள்.

அரசியல்வாதிகள் தொண்டர்களிடமும் கட்சித் தலைவர்களிடமும் விட்டுக் கொடுத்து நடந்துகொள்வீர்கள்.

கலைத்துறையினர் திறமைகளை வளர்த்துக் கொள்வீர்கள். பெண்கள் கணவரிடம் ஒற்றுமையுடன் பழகுவீர்கள். மாணவர்கள் உள்ளரங்கு விளையாட்டுகளில் ஈடுபடுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

கடன் பிரச்னைகளில் தெளிவான முடிவு எடுப்பீர்கள். வெளியூர் பயண வாய்ப்புகள் கைகூடும்.

உத்தியோகஸ்தர்கள் தங்கள் வேலைகளை உடனுக்குடன் செய்து முடித்து விடுவீர்கள். வியாபாரிகள் விற்பனையில் புதிய உத்திகளைப் புகுத்துவீர்கள். விவசாயிகள் உற்பத்தியில் உயர்வைக் காண்பீர்கள்.

அரசியல்வாதிகள் தடைகளைப் பொருட்படுத்தாமல் பணிகளில் கவனமாக இருப்பீர்கள். கலைத்துறையினர் சக கலைஞர்களை ஊக்கப்படுத்துவீர்கள்.

பெண்கள் ஆன்மிக விஷயங்களில் ஈடுபடுவீர்கள். மாணவர்கள் சக மாணவர்களுடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

பொருளாதார சிக்கல் மறையும். எதிர்பாராத உதவி கிடைக்கும்.

உத்தியோகஸ்தர்கள் ஊதிய உயர்வு, பதவி உயர்வு பெறுவீர்கள். வியாபாரிகள் பெரிய சந்தைகளை நாடிச் சென்று வியாபாரத்தைப் பெருக்குவீர்கள். விவசாயிகள் குத்தகைகளில் சீரான வருமானத்தைப் பெறுவீர்கள்.

அரசியல்வாதிகள் கட்சி மேலிடத்தின் சம்மதத்துடன் எதையும் செயல்படுத்துவீர்கள். கலைத்துறையினருக்கு அதிக முயற்சிகளுக்குப் பிறகு புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

பெண்களுக்கு கணவனுடனான கருத்து வேறுபாடுகள் நீங்கும். மாணவர்கள் படிப்பில் முன்னேற்றம் அடைவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

பொருளாதார சிக்கல் மறையும். எதிர்பாராத உதவி கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் ஊதிய உயர்வு, பதவி உயர்வு பெறுவீர்கள்.

வியாபாரிகள் பெரிய சந்தைகளை நாடிச் சென்று வியாபாரத்தைப் பெருக்குவீர்கள். விவசாயிகள் குத்தகைகளில் சீரான வருமானத்தைப் பெறுவீர்கள்.

அரசியல்வாதிகள் கட்சி மேலிடத்தின் சம்மதத்துடன் எதையும் செயல்படுத்துவீர்கள். கலைத்துறையினருக்கு அதிக முயற்சிகளுக்குப் பிறகு புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

பெண்களுக்கு கணவனுடனான கருத்து வேறுபாடுகள் நீங்கும். மாணவர்கள் படிப்பில் முன்னேற்றம் அடைவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

எவரிடமும் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். அதிர்ஷ்டவாய்ப்புகளைப் பெறுவீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு சக ஊழியர்களின் ஆதரவு பெருகும். வியாபாரிகள் கடன் கொடுத்து வியாபாரத்தைப் பெருக்க நினைக்க வேண்டாம். விவசாயிகள் புதிய குத்தகைகளை எடுப்பீர்கள்.

அரசியல்வாதிகள் திறமையுடன் செயல்பட்டு, கட்சி மேலிடத்தைக் கவர்வீர்கள். கலைத் துறையினர் ரசிகர் மன்றங்களுக்குச் சிறிது செலவு செய்ய நேரிடும்.

பெண்கள் புதிய ஆடை அணிமணிகளை வாங்குவீர்கள். மாணவர்கள் ஒருமித்த மனதுடன் படித்து மதிப்பெண்களை அள்ளுவீர்கள்.

சந்திராஷ்டமம் - மே 29.

summary

Dinamani Astrologer K.C.S. Iyer has accurately predicted the results for this week (May 29 - June 4). Read and benefit.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments