FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

எந்த கோயிலில் என்ன விசேஷம்?

சூரசம்ஹாரம் தகவல்கள் பற்றி...

- Center-Center-Chennai
பகிர்:

தென்காசி மாவட்டம், ஆய்க்குடி அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி, அருள்மிகு முத்துக்குமார சுவாமி திருக்கோயிலில் நடைபெற்று வரும் கந்த சஷ்டி பெருந்திருவிழாவில், நவம்பர் 15 }ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணி முதல் ருத்ர ஏகாதசி, அபிஷேகம், அலங்கார தீபாராதனையும், மாலை 4 மணிக்கு மேல் சூரசம்ஹாரத்துக்கு வெள்ளிமலை வாகனத்தில் சுவாமி எழுந்தருளலும் நடைபெறும்.

செங்கல்பட்டு டவுன், பெரிய நத்தம் அருள்மிகு ஸ்ரீ ஓசூர் அம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் நவம்பர் 22 }ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 6.30 முதல் 8 மணிக்குள்ளாக நடைபெற உள்ளது.

Advertisement

Advertisement

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வட்டம், சிக்கரசம்பாளையம் கிராமம், தனவாசி அருள்மிகு செல்வ விநாயகர், தனவாசி தனக்குமாரன், வள்ளி, தெய்வானை உடனமர் திருக்குமரன், இடும்பன், கடம்பன், கன்னிமார்கள், தனவாசி அப்பர் கோயில் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா நவம்பர் 22 }ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 8.30 முதல் 9.30 மணிக்குள்ளாக நடைபெற இருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.