எந்த கோயிலில் என்ன விசேஷம்? அக். 25ல் அன்னாபிஷேகம்!
திருவாவடுதுறை கோயிலில் திருமந்திர மாநாடு மற்றும் குருபூஜை விழா..
திருவாவடுதுறை ஆதீனம் நடத்தும் 23-ஆவது திருமந்திர மாநாடு அக்டோபர் 23 முதல் அக்டோபர் 25 வரை, திருவாவடுதுறை கோமுத்தீஸ்வரர் கோயிலில் காலை முதல் இரவு வரை பல்வேறு நிகழ்ச்சிகளுடன் நடைபெறும். அதைத் தொடர்ந்து அக்டோபர் 26}ஆம் தேதி மேற்கண்ட கோயிலில் உள்ள ஸ்ரீ திருமூல தேவ நாயனாருக்கு குருபூஜை விழா காலை 9 மணி முதல் பகல் 1 மணி வரை நடைபெற இருக்கிறது.
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் வட்டம், பழமுக்கல் கிராமத்தில் சபாபதி மடத்தில் அமைந்துள்ள, இறைவனோடு கலந்த சூரியனார் சாமி, வெள்ளம்மாள், ஆறுமுகசாமி அருளாசி தரக்கூடிய சித்தர் ஜீவசமாதி திருநெறிய தீந்தமிழ் திருக்குட நன்னீராட்டு விழா அக்டோபர் 25}ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.35 மணிக்கு மேல் 11.35 மணிக்குள் நடைபெற உள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம், நாச்சியார் கோவில் அருகில் 66, கொத்தங்குடி கிராமத்தில் அமைந்துள்ள மீனாட்சி அம்பாள் சமேத சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் அக்டோபர் 25-ஆம் தேதி இரவு 7 மணியளவில் மகா அன்னாபிஷேகம் நடைபெற இருக்கிறது.
Advertisement
Advertisement
திருவண்ணாமலை - அவலூர்ப்பேட்டை வழித்தடத்தில், மங்கலத்தை அடுத்த கருமாரப்பட்டியில் அமைந்துள்ள, தவத்திரு ஸ்ரீலஸ்ரீ வெள்ளையானந்த சுவாமிகளின் 14 -ஆம் ஆண்டு குருபூஜை விழா அக்டோபர் 30, 31 (வெள்ளி, சனி) ஆகிய இரண்டு நாள்களில் நடைபெற உள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.