FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

இந்த வாரம் எந்த கோயிலில் என்ன விஷேசம்?

நவராத்திரிப் பெருவிழா சிறப்பு நிகழ்ச்சிகள்..

9 அக்டோபர் 2026, 12:41 pm IST
நவராத்திரி விழாவில் சிறப்பு அலங்காரத்தில் காமாட்சி அம்மன்
பகிர்:

* சென்னை மாங்காடு அருள்மிகு காமாட்சி அம்மன் மற்றும் அருள்மிகு வைகுண்டப் பெருமாள் வகையறா திருக்கோயில்களில் நவராத்திரிப் பெருவிழா அக்டோபர் 10}ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 21}ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

* மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் நவராத்திரி திருவிழா அக்டோபர் 11-ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 19}ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.

* தஞ்சாவூர் அருள்மிகு பெரியநாயகி அம்மன் உடனுறை அருள்மிகு பெருவுடையார் திருக்கோயிலில் நவராத்திரி கலை விழா அக்டோபர் 11-ஆம் தேதி முதல் அக்டோபர் 20-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்நாள்களில் தினமும் அம்மனுக்கு காலை 7.30 மணிக்கு அபிஷேக ஆராதனையும், மாலை 6.30 மணிக்கு சிறப்பு அலங்காரமும், அதைத் தொடர்ந்து கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும்.

Advertisement

Advertisement

* சிவகங்கை மாவட்டம், வேம்பத்தூர் அருள்மிகு ஆவுடைநாயகி சமேத கைலாசநாதர் திருக்கோயிலில் கொலு வைத்து நவராத்திரி திருவிழா அக்டோபர் 11-ஆம் தேதி முதல் அக்டோபர் 20-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

* திண்டிவனம் அடுத்த சாரம் கிராமத்தில் அமைந்துள்ள அண்ணாமலையார் வாழ் தவஞான சித்தர் கணேஷ் அய்யா குடிலில் சிறப்பு பூஜை மற்றும் ஆன்மிக விழா அக்டோபர் 15-ஆம் தேதி (வியாழக்கிழமை) நடைபெறுகிறது.

இதையொட்டி காலை 6 மணிக்கு கோ பூஜை, 7.30 மணிக்கு காலை உணவு, 8 மணிக்கு வேள்வி, 9.30 மணிக்கு சிறப்பு அபிஷேகம், 11 மணிக்கு தீபாராதனை, 11.30 மணிக்கு சிறப்பு அன்னதானம் நடைபெற உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments