தாய்லாந்தில் ரூ.2 கோடி மதிப்புள்ள வைரத்தை விழுங்கிய சீனப்பெண்
தாய்லாந்து நாட்டின் தலைநகரான பாங்காக்கில் சீனப்பெண் ஒருவர் ரூ.2 கோடி மதிப்புள்ள வைரத்தை விழுங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தாய்லாந்து நாட்டின் தலைநகரான பாங்காக்கில் சீனப்பெண் ஒருவர் ரூ.2 கோடி மதிப்புள்ள வைரத்தை விழுங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பாங்காக் நகரில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற வைரங்களின் கண்காட்சியில் கலந்துகொண்ட ஜியாங் சுலியன் (39) அங்கிருந்து 6 கேரட் வைரக்கல் ஒன்றை திருடி அதற்கு மாற்றாக போலி கல் ஒன்றை வைத்துவிட்டு தனது கூட்டாளியுடன் கிளம்பினார்.
வைரம் திருட்டுபோனது தெரிந்தவுடன் அன்றிரவே போலீசாருக்கு இது தொடர்பாக தகவல் அளிக்கப்பட்டது. சி.சி.டி.வி. கேமராவில் அன்று பதிவாகியிருந்த வீடியோவைப் பார்வையிட்டபோது ஜியாங்கின் நடவடிக்கைகள் சந்தேகமளிப்பதாக இருந்ததைத் தொடர்ந்து, அவர் தொடர்பான தகவல் நகர விமான நிலைய போலீசாருக்கும், மற்ற முக்கிய பகுதிப் போலீசாருக்கும் தெரிவிக்கப்பட்டது.
Advertisement
Advertisement
ஜியாங் தனது கூட்டாளியுடன் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்லும் முயற்சியில் விமான நிலையத்துக்கு வந்தபோது அங்கிருந்த போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்தனர்.
பின்னர், ஜியாங்கின் உடலை சோதனை செய்த போது வைரம் இருப்பது தெரிந்தது. இதையடுத்து, 12 நிமிட அறுவை சிகிச்சை செய்து அந்த வைரத்தை மீட்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.