FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

நியூசிலாந்து கடற்கரை சாலை விபத்தில் 4 பேர் பலி

நியூசிலாந்தின் சுற்றுலாத்தலமான முரிவாய் கடற்கரை பகுதியில் நேற்று சாலையில் நிகழ்ந்த கார் விபத்தில் 2 இந்தியர்கள் உட்பட 4 பேர் உயிரிழந்தனர்.

9 ஜனவரி 2024, 12:12 pm
பகிர்:

நியூசிலாந்தின் சுற்றுலாத்தலமான முரிவாய் கடற்கரை பகுதியில் நேற்று சாலையில் நிகழ்ந்த கார் விபத்தில் 2 இந்தியர்கள் உட்பட 4 பேர் உயிரிழந்தனர்.

ஆக்லாண்டில் குயின்ஸ் அகடமி என்ற கல்வி நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் இந்தியரான தில்பிரித்(31) மற்றும் அவரது நண்பர்களான லெபனான் நாட்டைச் சேர்ந்த இமத் திப்(31), பாகிஸ்தானை சேர்ந்த சையது ஜாப்ரி (29) ஆகியோர் மார்க்கெட்டிங் பிரிவு அலுவலராகவும் ஒருவர் பேராசரியராகவும் பணி புரிந்து வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன் இந்தியரான புல்கித் மல்ஹோத்ரா(27), தில்பிரித் அழைப்பின் பேரில் நியூசிலாந்து சென்றிந்தார்.

இவர்கள் நால்வரும் மேற்கு ஆக்லாந்தில் உள்ள முரிவாய் கடற்கரையை பார்ப்பதற்காக காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென கட்டுபாட்டை இழந்த கார், சாலையில் தலைகுப்புற கவிழ்ந்து கடலுக்குள் விழுந்தது.

Advertisement

Advertisement

இது குறித்து தகவல் அறிந்தும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவசர உதவி குழு உடனடியாக காரை நீரில் இருந்து வெளியே எடுத்தது. இந்த பத்தில் காரில் இருந்த  புல்கித் மல்ஹோத்ரா மற்றும் தில்பிரித் உள்ளிட்ட நான்கு பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments