பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்: 17 பயங்கரவாதிகள் சாவு
பாகிஸ்தானின் பதற்றம் நிறைந்த வடக்கு வஜிரிஸ்தான் பகுதியில் அந்த நாட்டு விமானப் படை விமானங்கள் நிகழ்த்திய தாக்குதலில்
பாகிஸ்தானின் பதற்றம் நிறைந்த வடக்கு வஜிரிஸ்தான் பகுதியில் அந்த நாட்டு விமானப் படை விமானங்கள் நிகழ்த்திய தாக்குதலில் 17 தலிபான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இதுகுறித்து மூத்த ராணுவ அதிகாரி ஒருவர் கூறியதாவது:
வடக்கு வஜிரிஸ்தானின் ஷாவல் பகுதியில், கோர்பாஸ், úஸாய் ஆகிய கிராமங்களில் தலிபான் பதுங்குமிடங்களைக் குறி வைத்து விமானப் படை விமானங்கள் ஞாயிற்றுக்கிழமை குண்டு வீசின.
இந்தத் தாக்குதலில் 17 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். ஏராளமான பயங்கரவாதிகள் காயமடைந்தனர்.
பயங்கரவாதிகளின் ஏராளமான பதுங்குமிடங்கள் அழிக்கப்பட்டன என்றார் அவர்.
தெற்கு வஜிரிஸ்தான் பழங்குடியினப் பகுதியில் தலிபான் பயங்கரவாதிகள் இரு பாதுகாப்புப் படை வீரர்களை சுட்டுக் கொன்றதற்குப் பதிலடியாக இந்த வான்வழித் தாக்குதல் நிகழ்த்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
வடக்கு வஜிரிஸ்தானில் ஆதிக்கம் செலுத்தி வந்த தலிபான்கள் மீது, பாகிஸ்தான் ராணுவம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் தாக்குதல் நடத்தி வருகிறது.
தற்போது அந்தப் பகுதியின் 90 சதவீதம் ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டாலும், ஷாவல் பகுதியில் மட்டும் தலிபான்களின் நடமாட்டம் தொடர்வதாகக் கூறப்படுகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.