ஜி4 மாநாட்டிற்கு சிறப்புரையாற்றிய பிரதமர் மோடி
அமெரிக்காவில் நடைபெற்று வரும் ஜி 4 மாநாட்டில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி சிறப்புரையாற்றினார்.
நியூயார்க் : அமெரிக்காவில் நடைபெற்று வரும் ஜி 4 மாநாட்டில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி சிறப்புரையாற்றினார். இந்தியா, ஜெர்மனி, ஜப்பான், பிரேசில் நாடுகளடங்கிய ஜி4 மாநாடு நடைபெற்றது. நியூயார்க்கின் வால்டர்ப் அஸ்டோரியாவில் நடைபெற உள்ள இக்கூட்டத்தில், ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில், இந்தியா நிரந்தர உறுப்பினராவதற்கு, மோடி ஆதரவு திரட்டினார்.
அமைதி மற்றும் பாதுகாப்புக்கு ஏற்பட்டுள்ள பிரச்னைகள் மிகவும் சிக்கலாகவும், வரையறுக்க முடியாத அளவிற்கு உள்ளது. பல வகையிலும், நமது வாழ்க்கை உலகமயமாக்கப்பட்டுள்ளது. நாம் டிஜிட்டல் யுகத்தில் வாழ்கிறோம். பருவநிலை மாற்றம், பயங்கரவாதம் மிகப்பெரிய கவலையை ஏற்படுத்தியுள்ளது. சைபர் மற்றும் விண்வெளி துறைகள் பல வாய்ப்புகளையும் சவால்களையும் ஏற்படுத்தியுள்ளது என்றார். இந்த கூட்டத்திற்கு அனைவரையும் வரவேற்பதாக கூறி தனது உரையை பிரதமர் மோடி துவங்கினார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.