FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

கயானா சிறையில் தீ: 16 கைதிகள் பலி

கயானா தலைநகர் ஜார்ஜ்டவுனில் உள்ள சிறையில் கடந்த புதன்கிழமை நடைபெற்ற கைதிகள் போராட்டத்தால்

24 ஜனவரி 2024, 10:11 pm IST
பகிர்:

தென் அமெரிக்க நாடானா கயானா சிறை வளாகத்தில் ஏற்பட்ட தீயில் சிக்கி 16 கைதிகள் பலியாகினர்.
 இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:
 கயானா தலைநகர் ஜார்ஜ்டவுனில் உள்ள சிறையில் கடந்த புதன்கிழமை நடைபெற்ற கைதிகள் போராட்டத்தால் தீ வைப்பு சம்பவம் நடைபெற்றது. இது, உடனடியாக அணைக்கப்பட்டதால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. இந்நிலையில், வியாழக்கிழமை கைதிகள் திடீரென இரண்டாவது முறையாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 அப்போது நிகழ்த்தப்பட்ட தீவைப்பு சம்பவத்தில் சிக்கி 16 கைதிகள் பலியாகினர். மேலும், 8 கைதிகள் தீக்காயங்களுக்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
 ஐந்நூறு பேரை மட்டுமே அடைக்கும் வசதி கொண்ட அந்தச் சிறையில் 1,000 கைதிகள் அடைக்கப்பட்டிருந்தனர். இடநெருக்கடி மற்றும் வழக்கு விசாரணையில் தாமதம் ஆகியவற்றைக் கண்டித்துக் கைதிகள் போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments